அவர் எதிர்பார்த்தது நேர்மை
ஈக்வடாரைச் சேர்ந்த ஓர் இளம் பெண் ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தார். வேலைக்காக விண்ணப்பித்திருந்த பிற மனுதாரர்களுடன் உரையாடின பிறகு—மொத்தம் 36 பேர் வந்திருந்தனர்—தனக்கு வேலை கிடைப்பது அரிது என்பதாக அவர் உணர்ந்தார். அவர்கள் வேலைபார்த்த அனுபவத்தையும் ஒரு பல்கலைக்கழக படிப்பையும் கொண்டிருந்தனர், அவரோ அவ்விதமான எதையும் கொண்டிருக்கவில்லை. மேலும், கேட்கப்பட்ட ஆறு கேள்விகளில், இரண்டு கேள்விகளுக்கு அவர் தவறாக பதில் கூறியிருந்தார். என்றபோதிலும், ஒரு கேள்வியானது, தனிப்பட்ட இயல்புடைய ஒன்றாய் இருந்தது: “சத்தியம் உங்களுக்கு எதைக் குறிக்கிறது?”
அந்தப் பெண் பதிலுரைத்தார்: “சத்தியம் என்பது அறிவுக்கெட்டாத ஓர் ஊகம் அல்ல, ஆனால் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஏதோவொன்று. நாம் சத்தியத்தைப் பேச வேண்டும், பொய் பேசக்கூடாது, ஏனெனில் நாம் பொய் பேசினால் நம்மைநாமே பிசாசான சாத்தானின் கூட்டுறவுக்கு உட்படுத்துகிறோம். நாம் சத்தியத்தைப் பேசினால், கடவுளை மகிழ்விப்பதுடன், பல தனிப்பட்ட நன்மைகளையும் பெறுகிறோம்.”
அந்த மேலாளர் அப்பெண்ணின் மதத்தைப் பற்றிக் கேட்டபோது, அவர் தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்று பதிலுரைத்தார். அந்த வேலைக்கு அவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அடுத்த நாள் அவருக்குத் தகவல் கிடைத்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு அந்தப் பெண் தன்னை அவர் ஏன் தெரிவு செய்திருந்தார் என்று கேட்டார், அது அவரது நேர்மைக்காக என்பதாய் அந்த மேலாளர் கூறினார்.
பல மக்கள் இன்று நேர்மையற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பது உண்மையல்லவா? மறுபட்சத்தில், பைபிளை மதிக்கும் மக்கள் தங்கள் நேர்மைக்குப் பெயர்பெற்றவர்களாய் உள்ளனர். காவற்கோபுரம், ஜூலை 1, 1995 இதழ் கூறினது: “பைபிளில், ‘சத்தியம்’ என்பது தத்துவ அறிஞர்களால் தர்க்கம் செய்யப்படுகிற அறிவுக்கு எட்டாத, மனதால் புரிந்துகொள்ள முடியாத ஒரு கருத்தைப்போன்று ஒருபோதும் இல்லை.”
பைபிள் சத்தியத்திற்காகப் பரிந்துபேசும் ஒன்றாக உலகம் முழுவதிலும் பெயர்பெற்றுள்ள காவற்கோபுரம் பத்திரிகையை ஒழுங்காக வாசிப்பதிலிருந்து நீங்கள் நன்மையடைவீர்கள். ஒரு பிரதியைப் பெற நீங்கள் விரும்பினால், அல்லது ஓர் இலவச பைபிள் படிப்பைப் பெற விரும்பினால், தயவுசெய்து, Praharidurg Prakashan Society, Plot No A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.