இளைஞருக்கு இன்று தேவைப்படும் ஒன்று
அ.ஐ.மா., நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த 14 வயதுப் பெண் ஒருத்தி, “பரீட்சைகளின்போது மாணவர்கள் ஏன் ஏமாற்றுகின்றனர்” என்பதன்பேரில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு அறிக்கை எழுதவேண்டியிருந்தது என்பதாக சொன்னாள். ஆராய்ச்சி செய்வதற்காக அவள் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற தனது புத்தகத்தைப் பள்ளிக்கு எடுத்துச்சென்றாள். பள்ளியிலுள்ள அவளது சகமாணவி அதை எடுத்து, “பாலுறவும் ஒழுக்க நெறிகளும்” மற்றும் “எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, காதல் மற்றும் எதிர்பாலினம்” போன்ற பொருளடக்கத்திலுள்ள தலைப்புகளை வாசிக்க ஆரம்பித்தாள்.
“நான் இந்தப் புத்தகத்தை வைத்துக்கொள்ளலாமா?” என்பதாக அந்தப் பள்ளித்தோழி கேட்டாள்.
“அது என் புத்தகம் என்பதாகவும் அவளுக்கு வேறொரு புத்தகத்தைக் கொண்டுவந்து தருவதாகவும் நான் விளக்கினேன். அதை நான் கொடுத்தபோது, இன்னொரு வகுப்பு மாணவி அந்தப் புத்தகத்தைப் பார்த்து அவளுக்கும் ஒன்றைக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டாள். சில நாட்களிலேயே, பத்து இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகங்களை விருப்பப்பட்ட மாணவர்களுக்கு கொண்டுவந்தேன்,” என்பதாக அந்த மாணவி சொன்னாள்.
இந்தப் புத்தகம் வைத்துக்கொள்வதற்கு மதிப்பிற்குரியது என்பதாக அந்த 14-வயது மாணவி நினைக்கிறாள். அவள் சொன்னாள்: “எங்களுக்கு உண்மையிலேயே இந்தப் புத்தகம் தேவை, ஏனென்றால் இந்தக் காலத்தில் இளைஞராய் இருப்பது ரொம்ப கஷ்டம்.”
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது பைபிள் அறிவின் மதிப்பை உங்களோடு கலந்துபேச எவராவது உங்களை உங்கள் வீட்டில் சந்திக்க விரும்பினால், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற முகவரிக்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு மிக அருகிலுள்ள முகவரிக்கோ தயவுசெய்து எழுதுங்கள்.