உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 6/8 பக். 15-25
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—1997
விழித்தெழு!—1997
g97 6/8 பக். 15-25

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; விடைகளின் முழுப் பட்டியல் பக்கம் 25-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. ரோமில் விசாரணைக்காக கொண்டுசெல்லப்படும் வழியில் கிரேத்தா தீவின் கிழக்குக் கடலோரத்திலிருந்த எந்த முனையை பவுல் அடைந்தார்? (அப்போஸ்தலர் 27:7)

2. மோசே பார்வோனின் மகளால் கண்டெடுக்கப்பட்டபோது, அவள் அவன்மீது இரக்கம் காட்டுமளவுக்கு அவன் என்ன செய்துகொண்டிருந்தான்? (யாத்திராகமம் 2:6)

3. ஜீவனுக்குப் போகிற வழியை எத்தனை பேர் கண்டுபிடிப்பார்கள் என்று இயேசு கூறினார்? (மத்தேயு 7:14)

4. பூமியின் சிருஷ்டிப்புக்குப் பின்பு கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி என்ன செய்துகொண்டிருந்தது? (ஆதியாகமம் 1:2)

5. விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை இயேசுவின் பாதங்களில் பூசினபின்பு, மரியாள் தன் தலைமயிரைக் கொண்டு என்ன செய்தாள்? (யோவான் 12:3)

6. மனைவிமாருடன் சேர்த்துக் குறிப்பிடுகையில் கணவன்மாரை எபிரெய வேதாகமம் எப்படி அழைக்கிறது? (எஸ்தர் 1:20, NW)

7. மிகப் பெரியதாய் இருக்கும் எபிரெய எடையின் அலகும் பண மதிப்பும் எது? (2 இராஜாக்கள் 23:33)

8. ஜனங்கள் மரிப்பதிலிருந்து அவர்களைக் காக்கும்படி மோசேயால் அது செய்யப்பட்டிருந்தபோதிலும், தன் ஆட்சிக்காலத்தில் வணங்கப்பட்டு வந்த எதை அரசனாகிய எசேக்கியா அழித்தார்? (2 இராஜாக்கள் 18:4)

9. தன் கிறிஸ்தவ சகோதரியான சிந்திகேயாளுடன் நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்வதில் பிரச்சினை உடையவளாய் இருந்த பிலிப்பி பட்டணத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் என்ன? (பிலிப்பியர் 4:2, 3)

10. நியாயப்பிரமாணச் சட்டமாகிய கற்பலகைகளை வைப்பதற்காக கடவுளின் கட்டளைக்கிணங்க மோசே எதை உண்டுபண்ணினார்? (உபாகமம் 10:1-5)

11. அசீரிய ராஜா இஸ்ரவேலர்களைச் சிறைப்படுத்திச்சென்ற பிறகு, சமாரியாவில் குடியேற்றப்பட்ட ஆவியரால் வணங்கப்பட்டுவந்த தேவதைகள் யாவை? (2 இராஜாக்கள் 17:31)

12. ஓர் அந்திக்கிறிஸ்துவுக்கு “வாழ்த்துதல் சொல்லுகிறவன்” வேதாகமத்தின்படி என்னவாகிறான்? (2 யோவான் 11)

13. விசுவாசத்தில் இருந்த கொரிந்தியர்கள், இருதயங்களில் எழுதப்பட்ட ‘கிறிஸ்துவின் நிருபம்’ என்று பவுலால் பேசப்பட்டிருந்தாலும், எது பயன்படுத்தப்படவில்லை என்று அவர் கூறுகிறார்? (2 கொரிந்தியர் 3:3)

14. எந்தப் பட்டணத்துக்கு அருகில் சிம்சோன் முதன்முதலில் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டார், பின்பு எங்கு அடக்கம் பண்ணப்பட்டார்? (நியாயாதிபதிகள் 13:25; 16:31)

15. பரிசேயர், சதுசேயரின் போதகம் கேடு விளைவிக்கும் தன்மையுள்ளதாய் இருந்ததால், இயேசு அதை எதற்கு ஒப்பிட்டுப் பேசினார்? (மத்தேயு 16:11, 12)

16. ஏழு முத்திரைகளைக் கொண்ட சுருளைப் பார்த்தபோது யோவான் ஏன் அழுதார்? (வெளிப்படுத்துதல் 5:1-4)

17. எந்த இரண்டாவது பெயரால் யாக்கோபின் சகோதரன் ஏசா அறியப்பட்டான்? (ஆதியாகமம் 36:1)

18. காத்தின் ராஜாவாகிய ஆகீஸுக்கு முன்பாக தாவீது சிறுபிள்ளைத்தனமாக கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக்கொண்டிருந்தது ஏன்? (1 சாமுவேல் 21:13)

19. காத் ஊரைச் சேர்ந்த ஒருவர் எப்படி அழைக்கப்படுகிறார்? (2 சாமுவேல் 15:22)

20. சங்கீதம் 139:14-ல் தாவீது யெகோவாவை ஏன் துதித்தார்?

21. ஒரு படகின் பின்புறம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? (மாற்கு 4:38)

22. மோசே பிறந்த பிறகு எத்தனை மாதங்களுக்கு அவன் பெற்றோர் அவனை ஒளித்துவைத்திருக்க முடிந்தது? (எபிரெயர் 11:23)

23. சாத்தானை எதற்குப் பிதாவாய் இருப்பதாக இயேசு அழைத்தார்? (யோவான் 8:44)

24. பெர்சிய பேரரசிலிருந்த யூதர்களை அழிப்பதற்காக சகுனம் பார்க்க ஆமான் என்ன செய்தான்? (எஸ்தர் 3:7)

25. ஒலிவ மரம், திராட்சைக் கொடி ஆகியவற்றுடன், வேறு எதுவும் பைபிளின் மிக முக்கியமான தாவரங்களில் ஒன்று? (யோவான் 1:48)

26. தாவீது இஸ்ரவேலின் அடுத்த அரசனாயிருப்பார் என்று சவுலின் மகன் யோனத்தான் எந்த இடத்தில் வைத்து ஒப்புக்கொண்டார்? (1 சாமுவேல் 23:15-18)

27. கோரேஸ் எழுதியிருந்த நிருபத்தைப் பிரித்துப் படித்துப்பார்த்து, அதன்படி ஆலயத்தைத் திரும்ப எடுத்துக்கட்ட அனுமதி வழங்கிய பெர்சிய அரசன் யார்? (எஸ்றா 6:1-12)

28. எந்த விலங்கு முயலின் வகையாகவும், ஆனால் அதைவிடப் பெரிதாயும் இருக்கிறது? (லேவியராகமம் 11:6, NW)

வினாடிவினாவுக்கான விடைகள்

1. சல்மோனே

2. அழுதுகொண்டிருந்தான்

3. சிலர்

4. ‘ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தது’

5. அவருடைய பாதங்களைத் துடைத்தாள்

6. உடைமையாளர்

7. தாலந்து

8. வெண்கலச் சர்ப்பம்

9. எயோதியாள்

10. உடன்படிக்கைப் பெட்டி

11. நிபேகாஸ், தர்தாக்

12. “அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்”

13. மை

14. எஸ்தாவோல்

15. புளித்தமா

16. “ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப் படாததினால்”

17. ஏதோம்

18. அவர் பித்தங்கொண்டவர் என்று அந்த அரசனை நம்பும்படி செய்து தப்பித்துக்கொள்வதற்காக

19. கித்தியன்

20. ‘அவர் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்ட படியால்’

21. பின்னணியம்

22. மூன்று

23. பொய்க்கு

24. பூர் (என்னப்பட்ட சீட்டு) போடப்படும்படி செய்தான்

25. அத்திமரம்

26. சீப் என்ற ஒரு காட்டுப் பகுதியில்

27. தரியு

28. ஹேர் (Hare)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்