மிதமிஞ்சிய உடற்பயிற்சி
“என்றுமில்லாத அளவுக்கு உடல் ஆரோக்கிய இயக்கம் பரவியிருப்பதன் விளைவு, மிதமிஞ்சிய உடற்பயிற்சியாளர்களாகும் வெறியை உண்டாக்கியுள்ளது” என்று தி டோரன்டோ ஸ்டார் சொல்லுகிறது. மிதமிஞ்சிய உடற்பயிற்சி ஆண், பெண் என இரு சார்பினரையும் பாதிக்கிறது என்று ஸ்டார் அறிக்கை செய்கிறது. வாலிபத் துடிப்பை திரும்பப்பெற ஆண்கள் மிதமிஞ்சிய உடற்பயிற்சி செய்யலாம்; ஆனால் பெண்கள் மிதமிஞ்சிய உடற்பயிற்சி செய்வதற்கு அடிப்படை காரணங்கள், தங்கள் சரீர அமைப்பை பற்றிய தவறான எண்ணம் மற்றும் சாப்பாட்டுக் கோளாறுகளே என்று சில டாக்டர்களும் சிகிச்சை வல்லுநர்களும் கூறுகின்றனர்.
பலர் நன்றாக உணர்வதற்கும் தோற்றமளிப்பதற்கும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கின்றனர், ஆனால் முடிவில் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற தேவையினால் மிதமிஞ்சிய உடற்பயிற்சி செய்கின்றனர். அதிகமான உடற்பயிற்சி “வெறுமனே உடல் ஆரோக்கிய கட்டுப்பாட்டில் இல்லாமல் உணர்ச்சிசார்ந்த ஈடுபாட்டில் சார்ந்திருக்கும்போது” தெளிவாக புலப்படுகிறது என்று விளையாட்டு உளவியல் நிபுணரும் அநேக ஒலிம்பிக் அணிகளின் ஆலோசகருமான ரிச்சர்ட் ஸ்வின் உரிமை பாராட்டுகிறார். இந்தப் பிரச்சினையை கையாளும்போது, உடற்பயிற்சியானது நோயாளியின் வாழ்க்கையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று நிச்சயப்படுத்திக்கொள்ள டாக்டர்களும் சிகிச்சை வல்லுநர்களும் முயலுகின்றனர். அவர்கள் அதிக கஷ்டமான ஒரு வேலையோடுகூட குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கிறவர்களாக இருந்தால் மிதமிஞ்சிய உடற்பயிற்சி அவர்கள் நலனில் ஒரு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். பொது மருத்துவத்துறை பேராசிரியரான டாக்டர் தாமஸ் ஷ்வெங்கின்படி, “அவர்கள் இன்னமும் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாக இருக்கலாம்; ஆனால் சமூக பிரச்சினைகள், வேலை பிரச்சினைகள் மற்றும் குடும்ப பிளவுகள் உடையவர்களாக இருக்கலாம்.”
உடற்பயிற்சி அடிமைகளுடன் சம்பந்தப்பட்ட சில எச்சரிப்பு அறிகுறிகளை ஸ்டார் பட்டியலிடுகிறது: ‘சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், ஓடுதல் அல்லது பளுதூக்குதல் போன்ற தனித்து செய்யும் உடற்பயிற்சிகளை தெரிவு செய்தல்; உடற்பயிற்சி அட்டவணையை மாற்றிக்கொள்ள விருப்பமின்மை; உடற்பயிற்சி இன்றியமையாதது, அதை தவறவிடுவது தாங்கமுடியாதது என்ற நம்பிக்கை; மேலும் தனிப்பட்ட வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் சீர்கெடுதல்.’
உடல் ஆரோக்கியத் துறையில் வேலை செய்பவர்கள் மிதமான உடற்பயிற்சியின் பலன்களை ஒப்புக்கொண்டபோதிலும், மிக அதிக உடற்பயிற்சியின் தீங்கான விளைவுகளை குறித்தும் எச்சரிக்கின்றனர்.—1 தீமோத்தேயு 4:8.