எல்லா மதங்களும் கடவுளிடம் வழிநடத்துகின்றனவா?
எல்லா மதங்களும் ஒரே இடத்துக்கு வழிநடத்துகிற வெவ்வேறு வழிகளே என்று கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்றனர். உண்மை என்னவென்றால், மதங்களின் போதனைகளும், சடங்காச்சாரங்களும், தெய்வங்களும் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்தியாவிலுள்ள கேரளாவில் இருக்கும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிலையை கவனியுங்கள். இது, இந்து புராணத்தில்வரும் ஒரு கதாபாத்திரமாகும்.
பல பூர்வ மதங்களில் காளை வழிபாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, முதல் நூற்றாண்டு கிரேக்க சரித்திர ஆசிரியர் டயடோரஸ் சிக்யலஸின் பிரகாரம், அம்மோன் மக்களின் மோளேகு என்ற கடவுளுக்கும்கூட மனித உடலும் காளையின் தலையும் இருந்தது.
உலக முழுவதிலுமுள்ள வெவ்வேறு மதங்களில் ஏன் இத்தகைய குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் நிலவுகின்றன? இந்த மதங்கள் எல்லாம் ஒரே தொடக்கத்தை உடையனவா? இவை வெறுமனே ஒரே இடத்துக்கு வழிநடத்துகின்ற வேறுபட்ட பாதைகளே என்பது உண்மையா? கடவுள் இவை எல்லாவற்றையுமே அங்கீகரிக்கிறாரா?
உலகிலுள்ள மிகப்பெரிய மதங்களின் தோற்றத்தையும் அவற்றின் வளர்ச்சியையும் பற்றி கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் (ஆங்கிலம்) என்ற புத்தகத்திலுள்ள சிந்தை கவரும் விவரப்பதிவு இக்கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. நீங்கள் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினாலோ, இவ்விஷயங்களைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கலந்தாலோசிக்க யாரேனும் ஒருவர் உங்களை வீட்டில் சந்திக்க விரும்பினாலோ தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசங்களில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஒன்றிற்கோ எழுதுங்கள்.