முறியும் நிலையிலிருந்த மணவாழ்க்கைக்கு உதவி
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றி நியூ ஜீலாந்தின் வடக்குத் தீவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வாறு எழுதினார்: “இந்த புத்தகத்த நான் முதல்ல படிக்க ஆரம்பிச்சப்போ, ‘சேர்ந்தா உண்டு இல்லாட்டி இல்ல’ என்ற நிலையில என் திருமணம் இருந்துச்சுன்னு நெனச்சேன்.”
தன்னுடைய பின்னணியை அவர் விளக்கினார். “அம்மா ரெண்டுமுறை கல்யாணம் ஆகியிருந்தும், ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஆகவே, ஆண்கள் பிரயோஜனமில்லாதவங்க, பெண்கள கொடுமபடுத்ததான் அவங்களுக்கு தெரியும் என்ற எண்ணத்திலேயே நாங்க வளர்க்கப்பட்டோம். அதனால, பிடிவாதமும் கர்வமும் உள்ளவளா, சண்டைக்கு சளைக்காத ஒரு பெண்ணா நான் வளர்ந்தேன்.”
மாற்றங்கள் தேவை என்று அந்தப் பெண்மணி உணர்ந்தார். “என் கணவருக்கு கீழ்படியாமலும், ரொம்ப பெருமை உள்ளவளாவும் இருந்ததால, எங்க குடும்பம் சந்தோஷமா இருக்கிறதுக்கான வாய்ப்பு கொஞ்ச கொஞ்சமா கைநழுவிபோறத உணர்ந்தேன்.” ஆகவே, அவர் முக்கியமான மாற்றங்களை செய்தார். அவர் தொடர்ந்து விளக்குகிறார்: “இப்போ நானும் என் கணவரும் குடும்பமா அந்த புத்தகத்த படிக்கிறோம். ஒரு கிறிஸ்தவ மனைவியா இருக்கிறது எப்படீன்னு நான் இன்னமும் கத்துக்கிட்டே இருக்கேன். இப்போ நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம், ஆனால் இன்னும் நிறைய முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்குது.
“இப்ப இருக்கிற மாதிரி அன்பாகவும் அமைதியாகவும் முன்ன ஒருபோதும் எங்க குடும்பம் இருந்ததில்ல.”
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32-பக்க சிற்றேட்டில் எட்டாவது பாடத்தின் தலைப்பு “கடவுளைப் பிரியப்படுத்துகிற குடும்ப வாழ்க்கை” என்பதாகும். இந்தப் பிரதியை ஆறு ரூபாய்க்கு வாங்கிப்படிக்க உங்களுக்கு பிரியமா? Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India என்ற விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள். உங்களுடைய வீட்டிற்கு ஒருவர் வந்து உங்களோடு இலவசமாக பைபிள் படிக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து அதையும் தெரிவியுங்கள்.