‘இவை பரந்த மனப்பான்மையை வளர்க்கின்றன’
முன்னாள் சோவியத் ஐக்கிய குடியரசின் கிர்கிஸ்தானில் காராகூல் நிர்வாகக் கழகம் உள்ளது. இந்தக் கழகத்தில் பன்னாட்டு மொழிகளுக்கென்றே ஒரு துறை செயல்படுகிறது. இத்துறையின் தலைவர், யெகோவாவின் சாட்சிகளுடைய இலக்கியங்களைப் பாராட்டி, அவர்களுடைய ரஷ்ய கிளை அலுவலகத்திற்கு பின்வருமாறு எழுதினார்:
“சமுதாய குழப்பங்களும், பொருளாதார நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் இன்றைய உலகில் ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யன், கிரிகீஸ், துருகிஷ் மொழிகளைக் கற்றுக்கொடுக்க உங்களுடைய புத்தகங்களும் சிற்றேடுகளும் எங்களுக்கு பெரிதும் உதவுகின்றன. . . . நடைமுறை மொழிபெயர்ப்பை கற்றுக்கொள்வோர் மத்தியில் உங்கள் சிற்றேடுகளுக்கு பயங்கர டிமாண்டு உள்ளது. . . . உயிர்—அது எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற ஆங்கில புத்தகத்திற்காகவும், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் போன்ற உங்களுடைய புத்தகங்களுக்காகவும் மிக்க நன்றி.
“எங்களிடம் பயிலும் மாணாக்கர்களில் நிறையப்பேர் யெகோவாவின் சாட்சிகள். விழித்தெழு! பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகளை அவர்கள் ஆர்வத்தோடு படிக்கிறார்கள். வீட்டுப்பாடத்திலும் அவற்றை உபயோகிக்கிறார்கள்.”
இந்தக் கடிதத்தை எழுதியவர் குறிப்பாக விழித்தெழு! பத்திரிகையை இவ்வாறு பாராட்டினார்: “ஆர்வத்தைத் தூண்டி, அறிவுக்கேற்ற விஷயங்களை அள்ளிவழங்கும் கட்டுரைகளுக்காக நன்றி. . . . இவை எங்களுக்குள் நம்பிக்கையை விதைத்து, பரந்த மனப்பான்மையை வளர்க்கின்றன. . . . விழித்தெழு! பத்திரிகையில் வரும் ‘உலகை கவனித்தல்’ பகுதியை நாங்கள் எல்லாரும் விரும்பி படிக்கிறோம்.”
உங்களுக்கும் ஒரு விழித்தெழு! பத்திரிகை வேண்டுமென்றால் அல்லது ஒரு யெகோவாவின் சாட்சி உங்கள் வீட்டிற்கே வந்து, பைபிளைப் பற்றி உங்களோடு கலந்துரையாட நீங்கள் விரும்பினால் தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள்.