பதில்களை எங்கே பெறலாம்?
பிரச்சினைகளும் சிக்கலான கேள்விகளும் தங்கள் வாழ்க்கையில் வந்து மோதுவதால் அதிகமதிகமானோர் நிலைகுலைந்து போகின்றனர். பொய் பேசுவது சரியா? சூதாடுவது சரிதானா? பட்டும் படாமல் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளலாமா? கருச்சிதைவு செய்துகொள்ளலாமா? குடித்து வெறிப்பது அல்லது திருமணம் செய்யாதவர்கள் பாலுறவு கொள்வது தவறா?
இதுபோன்ற கேள்விகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அவை நம் வாழ்க்கையை மட்டுமே பாதிப்பதில்லை. நமக்குப் பிரியமானவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. தங்களுக்குப் பலனளிக்கும் பதில்கள் கிடைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அவ்வாறு விரும்பும் ஒரு பெண்மணி, அமெரிக்காவிலுள்ள மிஸ்ஸிஸிபியிலிருந்து உவாட்ச்டவர் சொஸைட்டிக்கு எழுதினதாவது:
“குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற உங்களது புத்தகத்தின் பின்பக்கத்தில், கூடுதலான தகவல் அல்லது ஓர் இலவச பைபிள் படிப்பு பெறுவதற்கு எனக்கு விருப்பமா என்ற ஒரு கேள்வியை கவனித்தேன். நிச்சயமாகவே எனக்கு விருப்பம்தான்!
“பைபிளை 1995-ன் கோடை காலத்திலிருந்து வாசித்தும் படித்தும் வருகிறேன். என் ஆன்மீக வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவரை பைபிளைப் படித்து புரிந்துகொள்ள முயன்றுவருகிறேன். அதைவிட மேலாக மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் விரும்புகிறேன். நீங்கள் இலவசமாய் சொல்லிக்கொடுப்பதாக சொல்கிறீர்கள். நான் அதை வேண்டாம் என்று சொல்வேனா!”
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் 192 பக்கங்கள் அடங்கியது. நீங்கள் அதைப் பெற விரும்பினாலோ, அல்லது உங்களுடன் இலவசமாக பைபிளைப் படிக்க எவராவது வரவேண்டும் என்று விரும்பினாலோ, தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, என்ற விலாசத்துக்கு, அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.