வடிவம் இங்கே, வடிவமைத்தவர் எங்கே?
இன்றுள்ள அநேகர் மனதில் இருப்பது இந்தக் கேள்வியே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அ.ஐ.மா.-விலுள்ள வர்ஜீனியாவில் இருக்கும் ஒரு மனிதன் இவ்வாறு எழுதினார்:
“உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா, படைப்பினாலா? என்ற ஆங்கில புத்தகத்தை இப்போதுதான் வாசித்து முடித்தேன். அது, சிந்தனையை தூண்டும் விதத்தில் முற்றுமுழுக்க ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டிருப்பதை உணர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்பு அ.ஐ.மா., தென் கரோலினாவிலுள்ள சமர்வில்லில் இருக்கும்போது உங்களுடைய மிஷனரி ஒருவர்தான் எனக்கு இந்தப் புத்தகத்தை கொடுத்தார்.
“அந்த அருமையான புத்தகத்தையும், படைப்பை ஆதரித்து விஞ்ஞான ரீதியில் அது அலசி ஆராய்ந்ததையும் மெச்சினேன். உங்கள் புத்தகத்தை வாசித்த பிறகு, பரிணாம கோட்பாடு உண்மையாக இருக்கவே முடியாது என்று நினைக்கிறேன். நான் பிறந்ததிலிருந்தே ரோமன் கத்தோலிக்கன்தான். ஆனாலும், இந்தப் புத்தகத்தை வாசித்து மகிழ்ந்தேன்; அதேபோல யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் உங்கள் மிஷனரிகள் சிலரிடம் பேசியதையும்கூட அனுபவித்தேன்.”
உயிர் தானாகவே தோன்றாமல் சிருஷ்டிக்கப்பட்டது என்பதற்கு நம்பகமான அத்தாட்சியை நீங்களும் பெற விரும்புகிறீர்களா? தயவுசெய்து Watch Tower, H-58, Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கு அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள். வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற 32-பக்க புரோஷரை உங்களுக்கு அனுப்பிவைப்போம். உயிருள்ள சிருஷ்டிகள் மத்தியில் காணப்படும் பிரமிப்பூட்டும் வடிவத்தையும் அதை வடிவமைக்க ஒருவர் ஏன் அவசியம் தேவை என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
□ வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற புரோஷரை எனக்கு அனுப்பி வையுங்கள்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ளும் திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
எல்லா படங்களும்: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck