உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g01 1/8 பக். 32
  • விடை தேடும் சந்தேகவாதி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விடை தேடும் சந்தேகவாதி
  • விழித்தெழு!—2001
விழித்தெழு!—2001
g01 1/8 பக். 32

விடை தேடும் சந்தேகவாதி

ஸ்லோவேனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் முழுக்காட்டுதல் பெற்ற ஒருவர் இப்படி அதில் கேட்டெழுதினார்: “கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை தயவுசெய்து எனக்கு அனுப்பி வைக்கவும். விழித்தெழு! பத்திரிகையைத் தவறாமல் தபால் மூலம் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”

“தயவுசெய்து என் வார்த்தைகளை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மதத்தைப் பொறுத்தவரை நான் ஒரு சந்தேகவாதி. எனவே மற்ற மதப் பத்திரிகைகளைப் போலத்தான் நான் விழித்தெழு! பத்திரிகையையும் நினைத்தேன். ஆனால், அதை வாசித்ததும் மலைத்துப்போனேன். அது எந்தக் கருத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துவதில்லை. ஆனால், ஒளிவுமறைவின்றி விளக்கமளிப்பதோடு அறிவுப்பூர்வமான செய்திகளையும் அளிக்கிறது.” பின்னர் பிரபல மதப் பத்திரிகையை குறிப்பிட்டு, அது ஜனங்களை அப்படியே மூளைச் சலவை செய்துவிடுகிறது.

விழித்தெழு! பத்திரிகைக்கு பின்பக்கத்தில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை வரவழைப்பதற்கான கூப்பன் கொடுக்கப்பட்டிருந்தும், அந்த நபர் அதை பூர்த்திசெய்து அனுப்புவதற்கு மாறாக ஏன் கடிதம் எழுதினார்? இதற்கு அவரின் பதில்: “விழித்தெழு! பத்திரிகையின் பக்கத்தை கிழித்து அதை பாழாக்க விரும்பவில்லை; அந்த பத்திரிகையை முழுமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன்!”

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32 பக்க சிற்றேட்டில் 16 பாடங்கள் உள்ளன. அவற்றிலிருந்து பைபிளின் அடிப்படை விஷயங்களையும் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். நீங்களும் இந்த சிற்றேட்டை பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலுள்ள விலாசத்திற்கோ அனுப்புங்கள்.

(g00 12/22)

◻ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை எனக்கு அனுப்பவும்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்