‘இரத்தின சுருக்கமாக இருந்தாலும் தகவல் நிறைந்தது’
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பற்றி இப்படித்தான் ஒரு பெண் விவரித்தார். இப்படி சொல்ல தன்னை எது தூண்டியது என்பதையும் விளக்கினார்: “இந்த சிற்றேட்டை படித்த பிறகு, குளோரியா என்ற வயதான பெண்மணிக்கு பைபிளை வாசிக்கும் ஆர்வம் மறுபடியும் வந்துவிட்டது. முன்பெல்லாம் கொஞ்சம் நேரம்கூட அவரால் அமைதியாக உட்கார்ந்து படிக்க முடியாது; ஆனால் இப்போது இரண்டு மணிநேரம் வரை சேர்ந்தாற்போல் படிக்க முடிகிறது. பைபிள் படிப்புக்கான பாடங்களை முன்கூட்டியே தயாரித்து விடுகிறார், எல்லா வசனங்களையும் எடுத்துப் பார்த்து விடுகிறார்.”
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்பது 32 பக்க பிரசுரம்; இந்தப் பத்திரிகையின் அளவுள்ளது. மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய நோக்கம் என்ன என்பதையும் அவரது அங்கீகாரத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அது தெளிவாக விளக்குகிறது. அதிலுள்ள ஆர்வத்திற்குரிய சில பாடங்கள் இவை: “கடவுள் யார்?,” “இயேசு கிறிஸ்து யார்?,” “பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?,” “கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?”
இந்த சிற்றேட்டைப் பற்றி கூடுதலான தகவல் பெற வேண்டுமென்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இந்தப் பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g04 01/08)
□ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.