இளைஞருக்கான ஒரு பாடநூல் பலத்த பாராட்டைப் பெறுகிறது
லீமூரூ என்ற கென்ய நகரத்திலுள்ள டீகோனி பெண்கள் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தின் பிரதிகளைக் கேட்டு யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். “பருவ வயது பிள்ளைகளைச் சமாளிப்பது பெரிய சவால் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் வெளியிட்டுள்ள புத்தகத்தின் இரண்டு பிரதிகள் எங்களிடம் இருக்கின்றன. எங்களுடைய ஆசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் இப்புத்தகம் பேருதவியாக இருந்திருக்கிறது. இதில் போதிய தகவல் இருக்கிறது, எங்களுடைய ஆசிரியர்கள் மற்றும் டீன் ஏஜ் மாணவிகளுடைய தேவைகளுக்கு ஏற்ற விதமாகவும் இருக்கிறது.”
அந்தத் தலைமை ஆசிரியர் பின்பு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “பிரயோஜனமான இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி மாணவிகளுக்குக் கற்பிக்க [பள்ளி] நிர்வாகம் விரும்புகிறது. அவர்களுக்கு இப்புத்தகம் மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்வதற்கு நாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அவர்களுடைய பெற்றோரும் ஆதரிக்கிறார்கள். தற்சமயம் 25 பிரதிகள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன.”
இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் இளைஞர்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அலசி ஆராய்கிறது. “என் பெற்றோர் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரும்படி நான் எவ்வாறு செய்விப்பது?,” “நான் வீட்டை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமா?,” “நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?,” “வாழ்க்கைத் தொழிலாக எதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்?,” விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?,” “அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?” போன்ற விஷயங்களைப் பற்றி பயனுள்ள விதத்தில் எடுத்துரைக்கிறது.
இவையெல்லாம் சில தலைப்புகளே. இதில் மொத்தம் 39 அதிகாரங்கள் உள்ளன; அவற்றில் மேலும் அதிகமான விஷயங்கள் சிந்திக்கப்படுகின்றன. இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து, இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பினால் இப்புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (g05 2/8)
◻ இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவலைப் பெற விரும்புகிறேன்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.