உன் இளமை அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்
ஒருவருடைய இளமைப் பருவம் வாழ்க்கையின் மகிழ்ச்சி மிகுந்த ஒரு காலப்பகுதியாக இருக்கக்கூடும். ஆனால் அநேகருக்கு அவ்விதமாக இருப்பதில்லை. மாறிக்கொண்டு போகும் தராதரங்கள் தாறுமாறான உலகத்தை உருவாக்கியிருக்கிறது. அத்துடன் இன்றைய உலகப் பிரச்னைகள் இளைஞரின் மகிழ்ச்சியை பறித்துவிடுகின்றன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வைக்காணவும், இப்படியாக தற்போதும் எதிர்காலத்திலும் வாழ்க்கையிலிருந்து மிகச் சிறந்ததை அனுபவித்திட உதவுவதற்கே இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
—பிரசுரிப்பவர்கள்
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேதவசனங்களை பைபிளின் எந்த மொழிபெயர்ப்பிலும் காணலாம். எனினும், மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிட்டிராத நேர்முகமான மேற்கோள் குறிப்புகள் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. பின்வருபவை, பயன்படுத்தப்பட்டுள்ள மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளின் பெயர் சுருக்கமும் பெயர்களுமாகும்.