யெகோவா நமக்கு ஓர் இரட்சகரைத் தருகிறார்
29 கடவுள் உண்டாக்கின முதல் ஆவி சிருஷ்டி அவருக்கு முதல் மகனைப் போல இருந்தார்.
கடவுள் அவரை அதிகமாக நேசிக்கிறார். கெட்டவர்களை அழிப்பதற்கும், கீழ்ப்படிதலுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்கும் அவரை உபயோகிப்பார்.—யோவான் 3:16, 36
30 யெகோவா தமது மகனை பூமியில் பிறக்கும்படி அனுப்பினார். அவருக்கு இயேசு என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவருடைய தாயின் பெயர் மரியாள்.—லூக்கா 1:30-35
31 இயேசு வளர்ந்தபோது, அநேக நல்ல காரியங்களைக் கற்பித்தார். யெகோவா ஒருவர்தான் உண்மையான கடவுள் என்று கற்பித்தார்.—மாற்கு 12:29, 30
நாம் யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 4:10; யோவான் 4:23, 24
யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றியும் மக்களுக்குக் கற்றுபித்தார்.—லூக்கா 17:20, 21
32 இயேசு வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார், மற்றும் அநேக நல்ல காரியங்களைச் செய்தார். அவர் கெட்ட காரியங்களைச் செய்யவில்லை.—அப்போஸ்தலர் 10:38; 1 பேதுரு 2:21, 22
ஆனால் அவர் நம்மை பாவத்திலும் மரணத்திலுமிருந்து எப்படி இரட்சிப்பார்?
33 நல்லவர்களை இரட்சிப்பதற்காக அவர் கடவுளுக்கு ஒரு பலியைச் செலுத்த வேண்டியதாக இருந்தது. கடந்த காலங்களில் ஜனங்கள் தங்களுடைய பாவங்களுக்காக மிருகங்களைப் பலியிடும்படி கடவுள் சொல்லியிருந்தார்.—எபிரெயர் 7:25, 27
34 இயேசு மிருகங்களைப் பலி செலுத்தவில்லை. நமக்காக அவர் தம்மையே பலியாக கொடுத்தார்.—மத்தேயு 20:28; எபிரெயர் 10:12
ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?