“அவை என்னுடைய வாழ்க்கை முறையைப் பாதித்து விட்டிருக்கின்றன”
மேற்கு ஆப்பிரிக்காவில், கானாவிலுள்ள ஒரு மனிதன் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிக்கைகளைப் பற்றி இதைச் சொன்னான். அவன் இவ்விதமாக எழுதினான்: “இந்தப் பத்திரிக்கைகள் கிறிஸ்துவினிடமாக என்னுடைய இருதயத்தைக் கவர்ந்துவிட்டன என்பதாக என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். கிறிஸ்துவைப் பற்றியும் இரட்சிப்பைப் பற்றியும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அதிகமான தகவல்களை அவை கொடுக்கின்றன. பாலிய சிநேகிதன் ஒருவன் இந்தப் பத்திரிக்கைகளை எனக்கு அறிமுகப்படுத்திய போது, அவை வாசிக்க சுவையற்றதாக இருக்கும் என்பதாக நான் நினைத்தேன். விநோதமாக வாசித்த போது, அதிகமதிகமாக அவற்றை அனுபவித்தேன். அவை என்னுடைய வாழ்க்கை முறையை பாதித்துவிட்டிருக்கின்றன. அவை அதிக அக்கறையூட்டுவதாகவும் வெகுவாக கல்வி புகட்டுவதாகவும் இருக்கின்றன.
“தயவு செய்து, ஒவ்வொரு மாதமும் சிறப்பான இந்தப் பத்திரிக்கைகளை எனக்கு அனுப்பி வையுங்கள்” என்பதாக அந்த மனிதன் முடித்திருந்தான். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பிரதிகளை நீங்களும் கூட உங்கள் வீட்டுக்குத் தருவிக்கலாம். ரூ.36 மட்டுமே அனுப்பி ஒரு வருடத்துக்கு இந்த இரு பத்திரிக்கைகளையும் (மாதம் இரண்டு பிரதிகளை) பெற்றுக் கொள்ளவும்.
தயவு செய்து காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிக்கைகளுக்கு ஒரு வருட சந்தாவை அனுப்பி வைக்கவும். 24 பிரதிகளுக்கு ரூ.36 அனுப்பியுள்ளேன். (மற்ற நாடுகளில் விலை விவரங்களுக்கு உள்ளூரிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளைக் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும்.)