நவீன கால விவாகங்களுக்கு மிச் சிறந்த ஆலோசனை
“ஆ! இந்தப் பத்திரிகைகளை நீ வாங்கி வாசிக்க வேண்டும்,” என்று குறுக்கிட்டாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி. “அந்தப் பத்திரிகையை அவள் வாசிக்க வேண்டும் என்று தான் விரும்புவதற்குக் காரணம் என்ன தெரியுமா?” என்ற அந்தப் பத்திரிகைகளை அறிமுக்கப்பத்திக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணி கேட்டாள். “உங்களுடைய பிரசுரங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் இப்பொழுது என் கணவுனுடன் சேர்ந்துவிட்டேன். நான் அவரைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பிரிந்து என் தாயுடன் தங்கியிருந்தேன். உங்களுடைய ஆட்களில் ஒருவர் என்னுடைய வீட்டிற்கு வந்து ஒரு பிரசுரத்தை விட்டுச் சென்றார். அதை நான் பிறகு வாசித்தேன். நான் என் கணவனிடம் திரும்பிப்போக தீர்மானிக்கச் செய்தது அந்தப் புத்தகம்தான். உங்களுடைய பிரசுரங்களை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இப்பொழுது நான் மகிழ்ச்சியுள்ள விவாக வாழ்க்கையை நடத்தி வருகிறேன்.” இந்தச் சிபார்சின்பேரில் அந்த வீட்டுக்காரர் உடனே அந்தப் பத்திரிகைகளை ஏற்றுக் கொண்டார்.
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழ! பத்திரிகைகள் குடும்பப் பிரச்னைகளைக் கையாளுவதற்கான பைபிள் அடிப்படையான ஆலோசனைகளைத் தொடர்ந்து கொடுத்து வருகிறது. ரூ.36 மட்டும் அனுப்புங்கள். நீங்கள் இரண்டு பத்திரிகைகளையும் (மாதத்திற்கு இரு பத்திரிகைகள்) என்ற கணக்கில் பெற்றுக்கொள்வீர்கள்.