வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர் 4:25-ல் எழுதியதுபோல் எருசலேம் எப்படி “தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்”ருந்தாள்?
அடிப்படையாக, எருசலேமும் அதன் மக்களும் பவுலின் நாட்களில் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு அடிமைப்பட்டிருந்தனர்.
புதிய உடன்படிக்கையிலிருக்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவினால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டதினால் சுயாதீனமுள்ளவர்களானார்கள் என்று அப்போஸ்தலன் கலாத்தியர் 4-ல் காண்பித்தான். இது நியாயப் பிரமாணத்தின் கீழிருந்த யூதர்களின் நிலைக்கு முரணாக இருந்தது. பவுல் இந்தக் காரியத்தை ஆபிரகாமின் மனைவி (சாராள்) மற்றும் மறுமணையாட்டி (ஆகார்) ஆகியவர்களைக் கொண்டு விளக்குகிறான்: “அந்த ஸ்திரீகள் இரண்டு எற்பாடுகளாம். [உடன்படிக்கைகள், NW]; ஒன்று சீனாய் மலையிலுண்டான ஏற்பாடு [உடன்படிக்கை, NW], அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே. ஆகார் என்பது அரபி தேசத்திலுள்ள சீனாய் மலை. [யெகோவா மோசேயின் மூலமாக இஸ்ரவேலுக்கு நியாயப்பிரமாணம் கொடுத்த இடம்], அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள்.”—கலாத்தியர் 4:24-26.
“ஸ்திரீகள் இரண்டு உடன்படிக்கைகள்” என்று பவுல் குறிப்பிட்டபோது, அவன் வெறுமனே சுருங்கியதோர் நடையில் பேசிக்கொண்டிருந்தான். யெகோவா தேவன் அடையாள அர்த்தத்தில் ஒரு தனிப்பட்ட உடன்படிக்கைக்கு அல்ல, ஆனால் உடன்படிக்கையிலிருக்கும் ஒருங்கே அமைக்கப்பட்ட மக்களுக்கே விவாகமானவராக இருந்தார். அவர், முன்னதாக, நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த இஸ்ரவேலைத் தமது மனைவியாகக் கருதியிருந்தார். (ஏசாயா 54:1, 6.) என்றபோதிலும் சுயாதீனமுள்ள ஸ்திரீ (சாராள்) மேலான எருசலேமை, யெகோவாவின் சர்வலோக அமைப்பைக் குறிக்கிறாள்.
ஆனால் நியாயப்பிரமாணம் பூரணமானதாகவும், கடவுளால் கொடுக்கப்பட்டதாகவுமிருக்க, யூதர்கள் நியாயப் பிரமாணத்துக்கு அடிமைப்பட்டிருந்தார்கள் என்று எப்படி சொல்லப்படலாம்?
‘நியாயப் பிரமாணம் பரிசுத்தமுள்ளதாயிருந்தது, கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயுமிருந்தது’ என்பது உண்மைதான். (ரோமர் 7:12) ஆனால் நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த அபூரண யூதர்கள் எவ்வளவுதான் முயன்றும் அதைப் பூரணமாகக் கடைபிடிக்க முடியவில்லை. (ரோமர் 7:14-16) கிறிஸ்தவ ஆளும் குழுவிடம் பின்வரும் கேள்வியைக் கேட்ட பேதுரு அப்போஸ்தலன் அந்த உண்மைக்குக் கவனத்தைத் திருப்புகிறான்: “இப்படியிருக்க நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனை சோதிப்பானேன்?” (அப்போஸ்தலர் 15:10) அதுபோல, கலாத்தியர் 4:4, 5-ல், பவுல், “நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக” கிறிஸ்து வந்தார் என்று கூறினான். கிறிஸ்தவர்கள் நியாயப் பிரமாணத்தில் கொடுக்கப்பட்டபடி நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் கைக்கொள்ள’ கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று வற்புறுத்துவோர் மறுபடியும் அடிமைகளாகும்படிச் செய்கிறவர்களாயிருப்பர்.—கலாத்தியர் 4:9, 10.
உண்மைதான், நவம்பர் 1, 1985 காவற்கோபுரம் பக்கம் 22-ல் குறிப்பிட்டபடி, முதல் நூற்றாண்டு யூதர்கள் பல வழிகளில் அடிமைகளாக இருந்தனர். அரசியல் ரீதியில் அவர்கள் ரோமருக்கு அடிமைப்பட்டிருந்தனர். பாவத்திற்கு அடிமைகளாயிருந்தனர். (யோவான் 8:34) மற்றும் தவறான மத கருத்துக்களுக்கும் அவர்கள் கட்டுப்பட்டவர்களானார்கள். ஆனால் கலாத்தியர் 4:25-ல் பவுல் குறிப்பிட்ட அந்த அடிமைத்தனம், அடிப்படையில் சீனாய் மலையடிவாரத்தில் கொடுக்கப்பட்டதும் ஆபிரகாமின் அடிமை மறுமனையாட்டியாகிய ஆகார் பிரதிநிதித்துவம் செய்யும் மோசேயின் நியாயப் பிரமாணத்திற்கு யூதர்கள் அடிமைப்பட்டிருந்த அந்த அடிமைத்தனமாகும். (w85 9/15)