தகவல் நிறைந்த ஒரு நூலகம்
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் வாசகர் இந்தப் பத்திரிகைகளைக் குறித்து இவ்விதமாக உணருகின்றனர்.
பிலிப்பீன்ஸில் ஒரு மனிதன், தான் தருவித்த பின்வெளியீடுகளைப் பெற்றுக்கொண்டதற்காக காவற்கோபுரம் பைபிள் மற்றும் துண்டுபிரதி சங்கத்திற்கு தன் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்து எழுதியதாவது:
“உங்களுடைய பத்திரிகைகளின் ஒவ்வொரு வெளியீட்டிலும் இருப்பதுபோன்று அவை தகவல் நிறைந்தவையாயிருக்கின்றன. மதம் சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டும் அவை விளக்கம் அளிப்பதாயில்லாமல், விஞ்ஞானம், மருத்துவம், சரித்திரம், அரசாங்கம், மற்றும் மொழி போன்ற காரியங்களையும் சிந்திக்கின்றன. ஒவ்வொரு வெளியீடும் எங்களுக்கு அக்கறைத்தூண்டுவதாயிருக்கும் கட்டுரைகளைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் கடந்த வருடங்களின் வெளியீடுகளை பைண்டு செய்து வைத்திருக்கிறோம் என்று குறிப்பிட விரும்புகிறேன். இப்படியாக எங்களுடைய தனிப்பட்ட நூலகத்தில் நான்கு தொகுப்புகள் இருக்கின்றன. மேற்கோள்களைக் காண அவை சிறந்த தொகுப்புகளாக இருக்கின்றன, எனவே நாங்கள் ஆலோசனைகளுக்கும், ஊக்குவிக்கப்படுவதற்கும் அவற்றினிடமாக அவ்வப்போது செல்லுகிறோம்.”
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை உங்களுடைய வீட்டிற்கும் வரவழைக்கலாம். ரூ.36 மட்டுமே அனுப்பவும். இந்த இரண்டு பத்திரிகைகளையுமே (மாதத்திற்கு இரண்டு பிரதிகள்) ஓர் ஆண்டுக்குப் பெற்றுக்கொள்வீர்கள்.
தயவுசெய்து காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை ஓர் ஆண்டு சந்தாவாக அனுப்பவும். இத்துடன் ரூ.36 அனுப்பியுள்ளேன்.