‘பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம்’
இவ்வாறே அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் ஓகியோவிலுள்ள ஒரு 15 வயது உயர்நிலைப்பள்ளி மாணவி, “உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பாணாமத்தின் மூலமா அல்லது சிருஷ்டிப்பின் மூலமா?” (Life—How Did It Get Here? By Evolution or by Creation?) என்ற ஆங்கில வெளியீட்டைப்பற்றி உணர்கிறாள். அவள் எழுதுகிறாள்:
நல்ல காரியங்கள் நேரம் எடுக்குமென்றால், அழகான உதாரணங்கள் கொண்டு விளக்கப்பட்ட, புரிந்துகொள்வதற்கு எளிதான, இதைத் தொகுப்பதற்கு எண்ணற்ற நாட்கள் எடுத்திருக்க வேண்டும். நிச்சயமாகவே இது முற்றிலும் வசீகரிக்கிறது! நான் நாளுக்கு ஒரு அதிகாரம் படிக்கிறேன், ஆனால் அதிசயமான இந்த உதவி புத்தகத்தை என்னுடைய தனிப்பட்ட படிப்பில் சேர்த்துக்கொள்ள எனக்கு அதிகமாக நேரமிருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நான் ஏற்கெனவே இந்த வெளியீட்டைப் படித்து மகிழக்கூடிய நண்பர்களின் மற்றும் ஆசிரியர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துள்ளேன். அடுத்த மாதம் பள்ளி துவங்கும்போது எனக்கு இந்த வெகுமதியை இவர்களோடு பகிர்ந்துகொள்ளும் சிலாக்கியம் இருக்கிறது.
அநேகமாக இந்த மாணவி உணர்ந்ததுபோன்றே நீங்களுங்கூட இந்தப் புதிய சிருஷ்டிப்பு புத்தகம் பற்றி உணர்வீர்கள்.
இந்தப் பொக்கிஷத்தை நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் யாராவது உங்களுக்குத் தெரியுமா? ஏன் அந்த நபருக்கு ஒரு பிரதியை பரிசாக அனுப்பக்கூடாது? வெறுமென கீழே உள்ள கூப்பனை நிரப்பி அத்துடன் ரூ.25/- அனுப்புவதன் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம்.
தயவுசெய்து 256 பக்கங்களைக் கொண்ட “உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பாணாமத்தின் மூலமா அல்லது சிருஷ்டிப்பின் மூலமா?” என்ற புத்தகத்தைப் பரிசாக அனுப்பி, அது (உங்கள் பெயர்) அனுப்பும் பரிசு என்பதை விளக்கும் கடிதத்தையும் அனுப்புங்கள். இத்துடன் ரூ.15/-ம் பதிவு தபால் செலவுக்கு ரூ.4.50-ம் அனுப்பியுள்ளேன்.