உங்களுடைய பிள்ளைக்கு ஒரு தனிப்பட்ட சந்தா இருக்கிறதா?
கற்றுக்கொள்வதற்கான ஒரு ஆசையைத் தங்கள் பிள்ளைகளில் வளர்ப்பதற்கு ஞானமுள்ள பெற்றோர் அருமையான புத்தகங்களை அவர்களுக்குப் பெற்றுத்தருகிறார்கள். உதாரணமாக தங்களுடைய பிள்ளைகள், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் வாராந்தர பைபிள் கலந்தாலோசிப்புக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் காவற்கோபுரம் என்ற பைபிள் பத்திரிகைக்கு ஒரு தனிப்பட்ட சந்தாவைக் கொண்டிருக்கிறார்களா என்பதைப் பல பெற்றோர் பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் ஒரு பிள்ளை எந்த வயதில் ஒரு தனிப்பட்ட சந்தாவைக் கொண்டிருக்க வேண்டும்?
இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஒரு தாயிடமிருந்து பின்வரும் இந்தக் கடிதம் வந்தது: “இந்தச் சந்தா எங்களுடைய 2 வயது மகனுக்கு. காவற்கோபுர படிப்பின்போது அவன் தன்னுடைய சொந்தப் பிரதியைக் கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்துவான். காவற்கோபுர படிப்பின்போது, எங்களிடம் எஞ்சிய பிரதிகள் இல்லாதிருக்கையில் வேறொரு பிரதியை அவனுக்குக் கொடுக்க முயற்சித்திருக்கிறேன், ஆனால் படங்கள் ஒத்து இருக்காததைக் கவனித்து, நாங்கள் உபயோகிக்கும் பிரதியையே கேட்பான். அழகிய வண்ணப்படங்கள் ஒரு இளம் பிள்ளையையுங்கூட கவருவதாயிருக்கிறது. மற்றும் தான் இன்னும் புரியாதிருக்கும் ஆவிக்குரிய உணவுக்கு ஆரம்பப் பருவத்திலேயே போற்றுதல் காண்பிக்க உதவும்.”
உங்களுடைய ஒவ்வொரு பிள்ளையும் காவற்கோபுரத்துக்கு ஒரு தனிப்பட்ட சந்தாவைக் கொண்டிருக்கிறானா என்று நீங்கள் ஏன் நிச்சயப்படுத்திக்கொள்ளக்கூடாது? கீழ்க்காணும் கூப்பனைப் பூர்த்திசெய்து ரூ18-டன் அனுப்பி ஒரு ஆண்டு சந்தாவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.