உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w89 1/1 பக். 6
  • போற்றுதலுள்ள ஒரு வயதான பெண்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போற்றுதலுள்ள ஒரு வயதான பெண்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • இதே தகவல்
  • கிறிஸ்தவக் குடும்பம் வயதானவர்களுக்கு உதவுகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • “எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • முதியோரை கவனித்தல்—கிறிஸ்தவ கடமை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • முதியோரின் அக்கறைகளில் கண்ணுங் கருத்துமாய் இருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
w89 1/1 பக். 6

போற்றுதலுள்ள ஒரு வயதான பெண்

டிசம்பர் 1, 1987 காவற்கோபுரம் இதழில் “வயதானவர்களை கவனிப்பவர்கள் யார்?” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை வாசித்த பின்பு ஜப்பானிலிருக்கும் ஒரு 79-வயது பெண் பின்வரும் ஒரு கடிதத்தை எழுதுவதற்குத் தூண்டப்பட்டாள்.

நான் உயர்வாக மதிக்கும் சகோதரர்களுக்கு,

டிசம்பர் 1, 1987 இதழில் முதியோரைப் பற்றிய கட்டுரையை படித்த பின்பு, அந்தத் தகவல் அதிக புரிந்து கொள்ளும் தன்மையோடும், தயவாகவும் எழுதப்பட்டிருப்பதை நான் காண்கிறேன். நான் பாரா 11-ற்கு வந்தபோது நான் என் கைக்குட்டையை எடுக்க வேண்டியதாயிற்று, ஏனெனில் நான் வெறுமென அழுது கொண்டே இருந்தேன். என்னால் நிறுத்த முடியவில்லை, அவை ஆழ்ந்த நன்றிக் கண்ணீராக இருந்தன. என்னே ஒரு அன்பு மற்றும் இரக்கம்! சங்கீதம் 150 சொல்வதை—யாவைத் துதி!—என்பதை மட்டுமே நான் செய்ய முடியும். முதியோருக்குத் தயவு காண்பிப்பதன் பேரில் மிக நுணுக்கமான விவரங்கள் வரையிலுமான, இந்தச் சிந்தனையார்ந்த கட்டுரைகளைப் பிரசுரித்ததற்காக சகோதரர்களாகிய உங்களுக்கு என்னுடைய ஆழமான நன்றியுணர்ச்சிகளைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மெய்தான், ஒவ்வொரு மாதமும் நீங்கள் பிரசுரிக்கக்கூடிய நேர்த்தியான கட்டுரைகளுக்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் போதிய அளவிற்கு என்னுடைய போற்றுதலைத் தெரிவிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை, மறுபடியும் நன்றி.

மகிழ்ச்சிக்கேதுவாய், எங்களுடைய சபையிலுள்ள ஒவ்வொருவரும் மிகவும் அன்பாகவும் தயவாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய கார்களில் என்னை ஊழியம் செய்யுமிடத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறார்கள். கொண்டுவந்தும் விடுகிறார்கள். அவர்களுடைய தயவான செயலால் நான் ஒரு துணைப்பயனியராக இருக்கிறேன். இப்பேர்ப்பட்ட மகத்தான மற்றும் பாதுகாப்புள்ள ஒரு அமைப்பில் வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் நான் ஆழ்ந்த நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

முதிர்வயதானவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கக்கூடிய ஆனால் வெகுகுறைவாக வரவேற்கப்படக்கூடிய இன்றுள்ள இந்த உலகில் இப்படிப்பட்ட ஒரு அன்பான கடவுளிடமிருந்து நாம் பெறக்கூடிய ஆசீர்வாதங்களைக் காட்டிலும் அதிக விலைமதிப்புள்ள வேறெதுவும் இருக்க முடியாது. சத்தியத்தை கற்றுக்கொள்வதற்கு எத்தனை பேருக்கு உதவி செய்யக்கூடுமோ அத்தனை பேருக்கு உதவி செய்வதே என்னுடைய ஜெபமாக இருக்கிறது. அப்பொழுது அவர்கள் நம்மோடு சேர்ந்து மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும்.

யெகோவாவுக்கு துதியும் என் அருமை சகோதரர்களுக்கு நன்றியும் உரித்தாகட்டும். என்னுடைய மோசமான கையெழுத்தினை மன்னியுங்கள். அதைக் குறித்து எனக்கு வெட்கமாக இருக்கிறது. யெகோவா உங்களை ஆசீர்வதித்து நல்ல தேக ஆரோக்கியம் அருள்வாராக.

ஒன்றுக்கும் உதவாத வயதானவள்,

[கையொப்பமிடப்பட்டது] நகோமி

இதைப்போன்ற வார்த்தைகளும் உணர்ச்சிக்கருத்துக்களும் உண்மை கிறிஸ்தவர்களின் அன்புக்கு எல்லையோ அல்லது வயது வரம்போ கிடையாது என்பதை உறுதி செய்கிறது. யெகோவாவின் சாட்சிகள் இளைஞரும் முதியோரும் இயேசுவின் வசனிப்புக்கு இசைய வாழ்வதன் மூலம் தங்கள் சீஷருக்குரிய அடையாளத்தை நடப்பித்துக் காட்டுகிறார்கள்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.”—யோவான் 13:35.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்