ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
சத்தியத்தை நாடித்தேடுவோர் சந்தர்ப்ப சாட்சிக்குச் செவிகொடுக்கின்றனர்
செம்மறியாடுகளைப்போன்ற ஆட்கள் நல்ல மேய்ப்பரின் குரலுக்குச் செவிகொடுப்பார்களென பைபிள் நமக்குத் தெரிவிக்கிறது. (யோவான் 10:27) பிரிட்டன் உட்பட, பல நாடுகளில் இவ்வாறு இருந்திருக்கிறது.
◻ உதாரணமாக, 1988-ல், கிறிஸ்மஸுக்கு முன்புதானே, பாமலா, யெகோவாவின் சாட்சிகளில் ஒரு பெண், தான் வேலைசெய்துகொண்டிருந்த அலுவலகத்தில் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்து, அதே வியாபார ஸ்தாபனத்துக்காக ஆனால் இங்கிலாந்தின் மற்றொரு பாகத்தில் வேலைசெய்யும் ஒரு விற்பனையாளரிடம் பேசினாள். அந்தப் பேச்சின் முடிவில், அந்த ஆள்: “நீ கிறிஸ்மஸுக்கு ஆயத்தமாகிவிட்டாயா?” என்று கேட்டார். பாமலா: “இல்லை!” என்றாள். “நீ சற்று பிந்திவிட்டாயல்லவா?” என்று அவர் கேட்டார். “நான் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை,” என பாமலா பதிலளித்தாள். அது வழக்கத்துக்கு மாறாயுள்ளதென அவர் சொல்லி காரணமென்னவெனக் கேட்டார். பாமலா, தான் யெகோவாவின் ஒரு சாட்சி எனக் கூறி, இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு பைபிளில் எந்தக் கட்டளையுமில்லை, அல்லாமலும் இயேசு டிசம்பர் 25 அன்று பிறக்கவில்லை. மேலும், கிறிஸ்மஸ் தொடக்கத்தில் ஒரு புறமதக் கொண்டாட்டமாயிருந்தது, எனத் தொடர்ந்து விளக்கினாள். தொலைபேசியில் பேசினவர், அதெல்லாம் வெகுவாய்க் கவனத்தைக் கவரும் வகையில் தொனித்ததெனக் கூறினார்.
மூன்று மாதங்களுக்குப் பின் பாமலா தொலைபேசியில் பேசுபவருக்குப் பதில் சொல்ல அதை எடுத்தபோது, அதில் பேசுபவர் பின்வருமாறு கூறினார்: “கிறிஸ்மஸுக்கு முன்னால் என்னுடன் பேசி, நீ கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லையென என்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா? நான் சத்தியத்தைக் கண்டடைந்தேன்!” அதே ஆள் பேசினார், கிறிஸ்மஸுக்கு இரண்டு வாரங்களுக்கப்பால், இரண்டு சாட்சிகள் தன்னுடைய வீட்டுக்கு வந்தார்கள். தான் அவர்களை உள்ளே அழைத்தார், தன்னுடன் பைபிள் படிப்பு தொடங்கப்பட்டதென அவர் விளக்கினார். தன் படிப்புகளில் தான் விரைவில் முன்னேற்றஞ் செய்தாரெனக் குறிப்பிட்டார். மணமாகாமல் வெறுமென கூடிவாழ்ந்த தன் காதல்பெண்ணினிடம் தங்கள் வாழ்க்கைமுறை யெகோவாவுக்குப் பிரியமல்லாததெனத் தான் கூறி, அதனால் தாங்கள் பிரிந்து வாழ்ந்து, இப்பொழுது தாங்கள் இருவரும் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குச் செல்கிறார்களெனவும் அவர் கூறினார்.
அந்த ஆண்டின் முடிவில், அவர்கள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஏற்கப்பட்டனர், 1990-ன் தொடக்கத்தில் அவர்கள் மணஞ்செய்துகொண்டனர். பின்பு அவர்கள் ஒன்றாய் முழுக்காட்டப்பட்டனர். தொலைபேசியில் சுருக்கமாய்ச் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததிலிருந்து உண்டான எத்தகைய மிகச்சிறந்த பலன்!
◻ இங்கிலாந்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்த மற்றொரு சகோதரியையும் யெகோவா ஆசீர்வதித்தார். காப்புறுதி உத்தரவாதமளிப்பவர் ஒருவர் தன் வீட்டுக்கு வந்தபோது, அந்தச் சகோதரி, அவர் நல்ல உடல்நலம், சந்தோஷம், மற்றும் நித்திய ஜீவனுக்குரிய உத்தரவாதமளிப்பை விரும்புவாராவென அவரைக் கேட்டாள். ஆம் என அவர் பதிலளித்து அவள் எந்த உத்தரவாதமளிப்பு காப்புறுதிப் பத்திரத்தைப்பற்றி பேசுகிறாளெனக் கேட்டார். பரதீஸில் நித்திய ஜீவனளிக்கும் கடவுளுடைய வாக்கை பைபிளிலிருந்து அவருக்கு எடுத்துக் காட்டினபோது, அவர், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை ஏற்று அந்த முழு புத்தகத்தையும் ஒரே சாயங்காலத்தில் வாசித்து முடித்தார். அந்தச் சகோதரியை மறுபடியும் பார்க்க வந்தபோது, அவர், அதை நம்ப தனக்கு விசுவாசம் மாத்திரம் இருந்தால்—அந்தத் தகவல் அதிசயமானதென அவளிடம் கூறினார். அவர் பைபிளைப் படிப்பதும் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு வருவதும் தேவையென அந்தச் சகோதரி விளக்கினாள். ஒரு பைபிள் படிப்பு ஒழுங்குசெய்யப்பட்டது, அவர் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார். அதே ஆண்டின் இலையுதிர்ப் பருவத்தின்போது அவர் முழுக்காட்டப்பட்டார். ஓர் ஆண்டுக்குப் பின்னர், அவர் தனக்கு முதல் சாட்சிகொடுத்த அந்தச் சகோதரியின் மகளை மணஞ்செய்துகொண்டார். “ஆகவே, என் சந்தர்ப்ப சாட்சியின்மூலம் நான் ஒரு சகோதரனையும் ஒரு மருமகனையும் அடைந்தேன்!” என்று அந்தச் சகோதரி சொல்லுகிறாள்.
சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதால் பைபிள் சத்தியத்தை அறிவிக்கையில் சத்தியத்தை நாடித்தேடுவோர் செவிகொடுப்பது உண்மையாயிருக்கிறது. இயேசு சொன்னபடி, அவருடைய செம்மறியாடுகள் அவருடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன. (w91 11/1)