உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 3/1 பக். 32
  • “கெர்ச்சிக்கிற சிங்கம்போல்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கெர்ச்சிக்கிற சிங்கம்போல்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 3/1 பக். 32

“கெர்ச்சிக்கிற சிங்கம்போல்”

சாத்தான் இருக்கிறான் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இன்று அநேகர் நம்புவதில்லை. இந்த நம்பிக்கையை “அறிவியல்பூர்வமற்றது” என்பதாக அவர்கள் கருதுவதுபோல் தெரிகிறது. ஏன், 1911-லேயே, என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு சொன்னது: “சாத்தானின் செயல்பாடுக்கு எந்த இடமும் காலியாக இல்லாதபடி, அறிவியல் அவ்வளவு அருமையாக, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றியும், மனிதனின் உள்ளார்ந்த வாழ்க்கையைப் பற்றியும் அநேக அம்சங்களை விளக்கியிருக்கிறது.” இறையியல் வல்லுநர்கள், சாத்தான் வெறுமனே ஓர் அடையாளம், ஒரு கட்டுக்கதை என்பதாக வாதாடுகிறார்கள். தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா சொல்கிறது: “நவீன கால இறையியல் வல்லுநர்களில் பலர், சாத்தானை மனித இயல்பின் தீய சக்தியின் அல்லது மிக மோசமான குணங்களின் ஓர் அடையாளமாக கருதுகிறார்கள்.”

ஆனாலும், எவை உண்மைகள்? நீங்கள் பைபிளை நம்பினால், சாத்தான் உண்மையிலேயே இருக்கிறான் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இயேசு, அவன் இருந்தான் என்று நம்பினதோடு மட்டும் அல்ல, அவனை “இந்த உலகத்தின் அதிபதி” என்றும் அழைத்தார். (யோவான் 14:30) அப்போஸ்தலனாகிய பவுல், அவனை ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ என்று அழைத்தார். (2 கொரிந்தியர் 4:4) முதிர்வயதான அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு சொன்னார்: ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’—1 யோவான் 5:19.

யோவான் சொல்வதை நீங்கள் ஏற்கவில்லையென்றால், சமீபகால வரலாற்றை நினைத்துப்பாருங்கள். மரண பயிற்சிக்குழுக்களையும், அரசாங்கம் பயன்படுத்தும் கொடுமைப்படுத்துதலையும் யோசித்துப்பாருங்கள். நம் சந்ததி கண்ட போர்களையும் இன அழிவுகளையும் நினைத்துப்பாருங்கள். நம் செய்தித்தாள்களின் தலையங்கங்களில் வரும் கொடிய குற்றச்செயல்களைப் பற்றி—சிலவற்றை வரிசைப்படுத்திக்காட்ட கூட்டுக்கொலைகள், கற்பழிப்புகள், தொடர் கொலைகள், குழந்தைகளை பால் சம்பந்தமாக துர்ப்பிரயோகம்செய்தல், போன்றவற்றைப் பற்றி என்ன சொல்வது? சாத்தானைத் தவிர வேறுயாரேனும் இந்த உலகத்தின் தேவனாக இருக்க முடியுமா என்ன?

கிறிஸ்தவ அப்போஸ்தலர் பேதுரு எச்சரித்தார்: “விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” (1 பேதுரு 5:8) ஒரு சிங்கம் உங்களுடைய சுற்றுப்புறத்தில் சுதந்திரமாக விடப்பட்டிருக்கும்போது, நீங்கள் அது இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பீர்களா? அல்லது தப்பித்துக்கொள்வதற்கு ஓடப் பார்ப்பீர்களா?

சாத்தான் இருக்கிறான் என்பதைக் குறித்து நிச்சயமாய் இருங்கள். அவன் இரக்கமற்றவன், கொடூரமானவன், நம்மைவிட அவனுக்குப் பலம் அதிகம். எனவே, அவனைவிட அதிக பலமுடையவரிடம் பாதுகாப்பிற்காக ஓடுங்கள். “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.” (நீதிமொழிகள் 18:10) யெகோவா தேவனோடு அடைக்கலத்தைப் பெறுங்கள், சீக்கிரத்தில் மனிதகுலம் இந்தக் கொடியவனாகிய சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்படும் என்பதை மனதில்வையுங்கள். என்னே ஒரு சந்தோஷமான விடுதலையாக அது இருக்கும்!—வெளிப்படுத்துதல் 20:1-3. (w92 12/1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்