பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளின் பெயரைப் பயன்படுத்தினார்களா?
கடவுளின் பெயர் எபிரெய வேத எழுத்துக்களில் ஆயிரக்கணக்கான தடவைகள் காணப்படுகிறது; அங்கு அது நான்கு மெய் எழுத்துக்களால் יהוה (யஹ்வ்ஹ் [YHWH], நான்கெழுத்துச் சொல்லால்) குறித்துக்காட்டப்படுகிறது. நாடுகடத்தப்படுதலுக்கு முன் இஸ்ரவேலில், பொ.ச.மு. 607-க்கு முன், அந்தப் பெயர் பொது வழக்கில் இருந்தது என்று அகழாய்வு கண்டுப்பிடிப்புகள் குறிப்பிடுகின்றன; மேலும் நாடுகடத்தப்பட்டதற்குப்பின் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்களாகிய எஸ்றா, நெகேமியா, தானியேல், மற்றும் மல்கியாவில் அது அடிக்கடி காணப்படுகிறது. இருப்பினும், படிப்படியாக, மேசியா தோன்றுவதற்கான சமயம் நெருங்கிக்கொண்டு வந்தபோது, யூதர்கள் அந்தப் பெயரைப் பயன்படுத்துவதற்கு மூடநம்பிக்கைசார்ந்த தயக்கத்தை உடையவர்களானார்கள்.
இயேசுவின் சீஷர்கள் கடவுளின் பெயரை (பொதுவாக “ஜெஹோவா,” அல்லது “யாவே” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதை) பயன்படுத்தினார்களா? ஆம் என்று அத்தாட்சி சொல்கிறது. இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கடவுளிடம் ஜெபிக்க கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) மேலும் அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் முடிவில், அவர்தாமே தம் பரலோக தந்தையிடம் ஜெபித்தார்: “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.” (யோவான் 17:6) இதைத்தவிர, இயேசுவின் சீஷர்களால் பயன்படுத்தப்பட்ட எபிரெய வேத எழுத்துக்களின் கிரேக்க மொழிபெயர்ப்பாகிய செப்டுயஜின்ட்டின் பூர்வ நகல்கள், கடவுளுடைய பெயரை எபிரெய நான்கெழுத்துச் சொல்லின் வடிவில் கொண்டிருந்தன.
சுவிசேஷங்களையும் கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் மற்ற பகுதிகளையும் (“புதிய ஏற்பாடு”) பற்றியதென்ன? கடவுளின் பெயர் செப்டுயஜின்ட்டில் காணப்பட்டதால், இந்த வேத எழுத்துக்களின் பூர்வ நகல்களிலும்—செப்டுயஜின்ட் மேற்கோள் காட்டப்பட்ட இடங்களிலாவது—காணப்பட்டிருக்க வேண்டுமென நியாயவாதம் செய்யப்பட்டிருக்கிறது. அப்படியாக, யெகோவா என்ற பெயர் கிரேக்க வேத எழுத்துக்களின் புதிய உலக மொழிபெயர்ப்பில் (New World Translation of the Christian Greek Scriptures) 200 தடவைகளுக்கும் அதிகமாகக் காணப்படுகிறது. சிலர் இது நியாயமற்றதென குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். எனினும், புதிய உலக மொழிபெயர்ப்பிற்கு எதிர்பார்க்க முடியாததாகத் தோன்றும் ஒரு மூலத்திலிருந்து ஆதாரம் கிடைப்பதாகத் தெரிகிறது: அது பாபிலோனிய தல்மூட்.
இந்த யூத மதப் படைப்பின் முதல் பாகம் ஷாபாத் (ஓய்வுநாள் [Sabbath]) என்ற தலைப்பை உடையதாய் இருக்கிறது; அது ஓய்வுநாள் நடத்தையை ஆட்கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய சட்டத் தொகுப்பைக் கொண்டிருக்கிறது. ஒரு பாகத்தில், பைபிள் கையெழுத்துப்பிரதிகளை ஓய்வுநாளன்று தீயினின்று பாதுகாப்பது சரியானதா என்பதைப் பற்றிய கலந்தாலோசிப்பு உள்ளது; பின்னர், இந்தப் பின்வரும் பகுதி காணப்படுகிறது: “அந்த வாசகத்தில் குறிப்பிடப்பட்டது: வெற்றிடங்கள் [கில்யோநிம் (gil·yoh·nimʹ)] மற்றும் மினிமின் புத்தகங்களை (Books of the Minim) நாம் ஒரு தீயினின்று பாதுகாக்க வேண்டியதில்லை. R. ஜோஸ் சொன்னார்: வாரத்தின் மற்ற நாட்களில் ஒருவர் அவற்றிலிருக்கும் தெய்வீக பெயர்களை வெட்டி எடுத்து, ஒளித்து வைத்துவிட்டு, மீதமானவற்றை எரித்துவிடவேண்டும். R. டார்ஃபான் சொன்னார்: அவை என்னுடைய கைக்கு வந்தால் அவற்றின் தெய்வீக பெயர்களுடன் சேர்த்து அவற்றை நான் எரிக்காவிட்டால் என்னுடைய மகனை நான் புதைக்க வேண்டியதாக ஆகக்கடவது.”—டாக்டர் H. ஃப்ரீட்மானின் மொழிப்பெயர்ப்பு.
மினிம் (mi·nimʹ) என்பவர்கள் யார்? அந்த வார்த்தை “உட்கட்சி பிரிவினர்” என்று அர்த்தப்படுகிறது; அது சதுசேயர்களை அல்லது சமாரியர்களைக் குறிக்கக்கூடும். ஆனால் டாக்டர் ஃப்ரீட்மானின்படி, இந்தப் பகுதியில், இது பெரும்பாலும் யூத கிறிஸ்தவர்களைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. அப்படியென்றால், டாக்டர் ஃப்ரீட்மானின்படி “வெற்றிடங்கள்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்ட கில்யோநிம் என்பவை யாவை? இரண்டு சாத்தியமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவை ஒரு சுருளின் வெற்றிடங்களான ஓரங்களாக அல்லது வெறுமையான சுருள்களாகக்கூட இருக்கலாம். அல்லது—அந்த வார்த்தையின் முரணான பொருளைக் கொள்ளும் விதத்தில்—அவை மினிமின் எழுத்துக்களாக இருக்கலாம்; அதாவது இந்த எழுத்துக்கள் வெறுமையான சுருள்களைப்போல் மதிப்பில்லாதவையாக இருக்கின்றன என்று சொல்வதாக இருக்கலாம். அகராதிகளில் இந்த இரண்டாம் அர்த்தம் “சுவிசேஷங்கள்” என்று கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு இசைவாக, மேலே மேற்கோள் காட்டப்பட்ட பகுதிக்குமுன் தல்மூடில் காணப்படும் வாக்கியம் இவ்வாறு வாசிக்கிறது: “மினிமின் புத்தகங்கள் வெற்றிடங்களைப் [கில்யோநிம்] போன்றவை.”
அதற்கு இசைவாக, லாரன்ஸ் H. ஷிஃப்மானின் ஒரு யூதன் யார்? (Who Was a Jew?) என்ற புத்தகத்தில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட தல்மூடின் பகுதி, பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: “சுவிசேஷங்களையும் மினிமின் (‘முரண் சமயக்கோட்பாடுடையவர்கள்’) புத்தகங்களையும் நாங்கள் தீயினின்று (ஓய்வுநாளன்று) பாதுகாப்பதில்லை. மாறாக, அவற்றிற்குரிய இடத்தில், அவை மற்றும் அவற்றின் நான்கெழுத்துச் சொற்களும் எரிக்கப்படுகின்றன. ரபி யோஸ் ஹா-கெலிலி சொல்கிறார்: அந்த வாரத்தில், ஒருவர் அவற்றின் நான்கெழுத்துச் சொற்களை வெட்டி, ஒளித்து வைத்துவிட்டு, மீதமானதை எரிக்கவேண்டும். ரபி டார்ஃபன் சொன்னார்: நான் என்னுடைய மகன்களைப் புதைப்பேனாக! (இந்தப் புத்தகங்கள்) என்னுடைய கைக்கு வருமானால், அவற்றின் நான்கெழுத்துச் சொற்களுடன் சேர்த்து அவற்றை நான் எரித்துவிடுவேன்.” மினிம் என்பவர்கள் இங்கே யூத கிறிஸ்தவர்கள் என்று டாக்டர் ஷிஃப்மான் தொடர்ந்து வாதாடுகிறார்.
தல்மூடின் இந்தப் பகுதி உண்மையில் பூர்வ யூத கிறிஸ்தவர்களைப்பற்றி பேசுகிறதா? அப்படியானால், கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரை, நான்கெழுத்துச் சொல்லை, தங்களுடைய சுவிசேஷங்களிலும் எழுத்துக்களிலும் உட்படுத்தினர் என்பதற்கு இது பலமான அத்தாட்சியாக இருக்கிறது. மேலும் தல்மூட் இங்கு யூத கிறிஸ்தவர்களைக் குறித்து கலந்தாலோசிப்புச் செய்கிறது என்பதற்கு அதிகப்படியான சாத்தியம் இருக்கிறது. அத்தகைய ஒரு கருத்திற்கு ஓர் அறிவாராய்ச்சி சார்ந்த ஆதரவு இருக்கிறது; மேலும் தல்மூடில், அந்தச் சூழமைவு அதற்குக் கூடுதல் ஆதரவை அளிப்பதாகத் தோன்றுகிறது. ஷாபாத்திலிருந்து மேலே மேற்கோள் காட்டப்பட்டதைப் பின்தொடரும் பகுதி, கமாலியேலையும் ஒரு கிறிஸ்தவ நியாயாதிபதியையும் உட்படுத்தும் ஒரு கதையை விவரிக்கிறது; அதில் மலைப்பிரசங்கத்தின் பாகங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பின்னரே, விசுவாசத் துரோக கிறிஸ்தவம் இயேசுவின் எளிய போதனைகளிலிருந்து விலகிச்சென்றபோதே, கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டியவர்களால் கடவுளின் பெயர் பயன்படுத்தப்படாமல் போயிற்று; செப்டுயஜின்ட், சுவிசேஷங்கள், இன்னும் மற்ற பைபிள் புத்தக நகல்களிலிருந்து நீக்கவும்பட்டது.
[பக்கம் 31-ன் படம்]
இயேசுவின் நாளில், கடவுளின் பெயர் “செப்டுயஜின்ட்”டில் காணப்பட்டது
[படத்திற்கான நன்றி]
Israel Antiquities Authority