உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 1/1 பக். 32
  • அவை உங்களுக்குப் பயன்தருமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவை உங்களுக்குப் பயன்தருமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 1/1 பக். 32

அவை உங்களுக்குப் பயன்தருமா?

குடும்பங்களை உறுதிப்படுத்தவும் தனிப்பட்ட உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ளவும் தேவையான பைபிள் வழிநடத்துதல்களை மனதிற்குக் கொண்டுவருவதன்மூலம், உங்கள் கையிலுள்ள பத்திரிகை உற்சாகத்தின் ஊற்றுமூலமாக இருக்க தயாரிக்கப்பட்டிருக்கிறது. இன்றுள்ள கஷ்ட காலங்கள் பைபிளில் ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டன என்பதை இது காண்பித்து, பரிகாரத்தை—கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தை—முக்கியப்படுத்திக் காண்பிக்கிறது. நீங்கள் காவற்கோபுரத்திலிருந்தும் அதன் துணைப் பத்திரிகை விழித்தெழு!-விலிருந்தும் பயன்பெறமுடியுமா?

பிலிப்பைன்ஸிலிருந்து வில்மா என்ற பெயருடைய ஒரு பெண் எழுதினார்: “உங்கள் பிரசுரங்களை வர்ணிப்பதற்கு ஒரு வார்த்தை இருக்கிறதென்றால், ‘அற்புதம்’ என்ற வார்த்தையையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று நினைக்கிறேன். உங்கள் விழித்தெழு! மற்றும் காவற்கோபுரம் பத்திரிகைகளை மணிலாவிலிருந்து இல்லத்திற்குப் பேருந்தில் திரும்பியபோது முதன்முதலாகப் பார்த்து படித்தேன். பயணம் செய்கையில் பொதுவாகச் செய்தித்தாள்களை நான் எடுத்துச்செல்வேன். ஆனால் இந்த முறை நான் எதையும் எடுக்காமல் போனேன்.

“எனதருகில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயது மனிதர் உங்களுடைய பிரசுரங்களை வைத்திருந்தார். அவர் விழித்தெழு! பத்திரிகையைப் படித்த பின்பு மற்றொரு பத்திரிகையை, காவற்கோபுரத்தை எடுத்தார். விழித்தெழு! பத்திரிகையை வாங்கிப் படிக்கும் வாய்ப்பைச் சிக்கெனப்பிடித்துக்கொண்டேன். உண்மையாகவே, அந்தப் பத்திரிகைகளை அனுபவித்துப் படித்தேன், ஏனென்றால் கட்டுரைகள் எல்லாமே ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் காலத்திற்கேற்றதாகவும் ஒழுக்கமூட்டுவதாகவும் இருந்தன.”

அந்தப் பெண் இவ்வாறு முடிவாகச் சொன்னார்: “உங்கள் பத்திரிகைகளைப் பெற நான் நிச்சயமாகவே விரும்புகிறேன். தயவுசெய்து நான் அவற்றை எப்படிப் பெறுவது என்பதை எனக்குத் தெரிவியுங்கள்.” பிலிப்பைன்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் தங்களுடைய அஞ்சல் அனுப்புதல் பட்டியலில் இந்தப் பெண்ணைச் சேர்த்துக்கொள்வதில் அதிக சந்தோஷப்பட்டது.

காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் பிரதிகளைப் பெற நீங்கள் விரும்பினால், தயவுசெய்து ஒவ்வொரு ஆண்டுச் சந்தாவிற்கும் ரூ. 60.00 அனுப்பி, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு எழுதுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்