உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 12/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • இதே தகவல்
  • உருக்கமான இரக்கமுள்ளோராக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • யெகோவா பற்றுமாறாதவர், மன்னிப்பவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • கடவுளுடைய நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • மன்னிக்கிறவர்களாய் இருங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 12/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அண்மையில் வெளிவந்த காவற்கோபுர பிரதிகள் உங்களுக்கு நடைமுறை பயனுள்ளவையாய் இருப்பதாகக் கண்டீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளால் நீங்கள் ஏன் உங்கள் ஞாபகசக்தியைச் சோதித்துப் பார்க்கக் கூடாது:

◻யெகோவாவின் சாட்சிகள் ஏன் தொடர்ந்து தங்கள் அயலாரைச் சந்திக்கிறார்கள்?

வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்யத்தின் மூலமாக யெகோவாவின் சாட்சிகள் தாமே கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறார்கள்; மேலும் அயலாருக்கான அன்பால் தூண்டப்பட்டவர்களாக, அவர்களுக்கும் அதே ஆசீர்வாதம் கிடைக்கும்படி விரும்புகிறார்கள். இவ்வாறு, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவர்கள் தங்கள் அயலாரைச் சந்திக்கும்படி தன்னலமற்ற அன்பால் கட்டாயப்படுத்தப்பட்டவர்களாய் உணருகிறார்கள். (மத்தேயு 6:9, 10; 22:37-39)—8/15, பக்கங்கள் 8, 9.

◻பரிணாமத்தில் நம்பிக்கை எப்படி விசுவாசத்தைப் பொறுத்த ஒரு காரியமாக இருக்கிறது?

புதிய உயிரின வகைகளை உருவாக்கும் வகை மாற்றங்களை—பயனுள்ளவைகளைக்கூட—விஞ்ஞானிகள் ஒருபோதும் கண்டதில்லை; இருந்தாலும், இவ்வாறே புதிய வகைகள் தோன்றியதாக பரிணாமவாதிகள் வாதாடுகிறார்கள். தன்னியல் உயிர்த் தோற்றத்தை பரிணாமவாதிகள் காணவில்லை; இருப்பினும் இவ்வாறே உயிர் தோன்றியதாக அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.—9/1, பக்கம் 5.

◻வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் காரணமாக வரக்கூடிய சோர்வை எப்படி சிறந்தவிதத்தில் மேற்கொள்ள முடியும்?

நம்முடைய நிலைமை என்னவாக இருந்தாலும், நம்மால் செய்ய முடியாதவற்றைக் குறித்துக் கவலைப்படுவதற்கு மாறாக, நம்மால் செய்ய முடிகிறவற்றில் கவனம் செலுத்துவோமானால், வாழ்க்கை அதிக திருப்திகரமானதாக இருக்கும்; மேலும் யெகோவாவின் சேவையில் நாம் சந்தோஷத்தைக் கண்டடைவோம். (சங்கீதம் 126:5, 6)—9/1, பக்கம் 28.

◻மன்னிப்பதன் நன்மைகள் யாவை?

மற்றவர்களுக்கு மன்னிப்பது நல்ல உறவுகளை முன்னேற்றுவிக்கிறது (எபேசியர் 4:32); அது உடனொத்த மனிதரிடம் சமாதானமாயிருப்பதை மட்டுமல்ல, உள்ளான மனசமாதானத்தையும் கொண்டுவருகிறது (ரோமர் 14:19; கொலோசெயர் 3:13-15); மற்றவர்களுக்கு மன்னிப்பது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதைச் சாத்தியமாக்குகிறது (மத்தேயு 6:14); மேலும், நாம் தாமே மன்னிப்பு தேவைப்படுவோராக இருப்பதை நமக்கு நினைப்பூட்ட உதவிசெய்கிறது. (ரோமர் 3:23)—9/15, பக்கம் 7.

◻தீர்க்கதரிசியாகிய ஆமோஸின் முன்மாதிரி, நம்முடைய பிரசங்க வேலையில் நமக்கு எப்படி உதவுகிறது?

ஆமோஸைப் போலவே, கடவுளுடைய செய்தியை நாம் மாற்றுவதுமில்லை வலிமைகுறைத்துக் கூறுவதுமில்லை. அதற்குப் பதிலாக, கேட்போரின் பிரதிபலிப்பு என்னவாயினும், நாம் கீழ்ப்படிதலுடன் அதை அறிவிக்கிறோம்.—9/15, பக்கம் 17.

◻கடவுளுடைய எந்தத் தனிச்சிறப்பு பண்புகளை நாம் பின்பற்றவேண்டும்?

யெகோவாவின் ஒழுங்கமைக்கும் திறமையும் அவருடைய மகிழ்ச்சியும் குறிப்பிடத்தக்க இரு பண்புகளாகும். (1 கொரிந்தியர் 14:33; 1 தீமோத்தேயு 1:11) கடவுளுடைய இந்தப் பண்புகள் சமநிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன; இதன் காரணமாக, ஒன்று மற்றொன்றைப் பாதிக்கும் வகையில் மேலோங்கியிருக்கச் செய்யப்படுவதில்லை.—10/1, பக்கம் 10.

◻தங்கள் பிள்ளைகள் யெகோவாவைச் சேவிக்கும்படியாக பெற்றோர் எடுத்திருக்கும் சில உடன்பாடான படிகள் யாவை?

சிறுபிராயத்திலேயே ஆரம்பிப்பது ஒரு இன்றியமையாத திறவுகோலாக இருக்கிறது. சிறுபிராயத்தில் பெற்றுக்கொள்ளப்படும் அபிப்பிராயங்களும் கற்றுக்கொள்ளப்படும் பாடங்களும் வாழ்நாள் முழுவதற்கும் நிலைத்திருக்கும். (நீதிமொழிகள் 22:6) யெகோவாவுக்கும் அவருடைய வணக்கத்திற்கும், கீழ்ப்படிதலையும் மரியாதையையும் எல்லா கூட்டங்களிலும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது முக்கியம். வெற்றிகரமான பெற்றோர், தவறான மனச்சாய்வுகளைக் கண்டுகொள்ள கற்றுக்கொண்டு, அவற்றைத் திருத்திக்கொள்வதற்குத் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள். (நீதிமொழிகள் 22:15) முடிவாக, உங்கள் பிள்ளை நியாயமாகவே முயன்று அடையக்கூடிய தேவராஜ்ய இலக்குகளை சிறுபிராயத்திலேயே வைக்கத் தொடங்குங்கள்.—10/1, பக்கங்கள் 27-8.

◻யெகோவாவுடைய மன்னிப்பின் எந்தத் தனித்தன்மையுள்ள ஓர் அம்சத்தை நாம் நடைமுறைப்படுத்த முயல வேண்டும்?

யெகோவா மன்னிக்கவும் மறந்துவிடவும் செய்கிறார். (எரேமியா 31:34) இவ்வாறு செய்வது மானிட சிருஷ்டிகளுக்குக் கடினமாக இருக்கிறது. அவ்வாறு செய்வதன் முக்கியத்துவம், மத்தேயு 6:14, 15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி இயேசுவால் அழுத்திக் காட்டப்பட்டது.—10/15, பக்கங்கள் 25-6.

◻நாம் இரக்கமுள்ளவர்களாய் ஆவதற்கு மூன்று தடைகள் யாவை?

நம்முடைய பாவமுள்ள மனித இயல்பின் காரணமாக, பொறாமை உணர்ச்சிகள் வேர்கொள்ளலாம். யாராவது ஒருவரைக் குறித்து நாம் பொறாமை கொண்டால், நாம் அவரை எப்படி உருக்கமான இரக்கத்துடன் நடத்தலாம்? தேவையில்லாமல் வன்முறைக்கு வெளிப்படுத்தப்படும் நிலையில் வைப்பது மற்றொரு தடையாகும். இது நம்மை மற்றவர்களுடைய துன்பத்திடமாக உணர்ச்சியற்றவர்களாக இருக்கும்படி செய்கிறது. மேலுமாக, தன்னலம் கருதும் ஒருவர் பெரும்பாலும் இரக்கமற்றவராக இருக்கக்கூடும். (1 யோவான் 3:17)—11/1, பக்கம் 19, 20.

◻யோபைப் பற்றிய வேதப்பூர்வ பதிவிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

யோபின் பதிவு, சாத்தானின் சூழ்ச்சிமுறைகளைப் பற்றி நம்மை அதிகப்படியாக உணரச்செய்து, யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமை எப்படி மனிதனின் உத்தமத்தோடு தொடர்புடையதாய் இருக்கிறது என்பதைக் காண நமக்கு உதவுகிறது. யோபைப் போல, கடவுளை நேசிக்கும் அனைவரும் சோதிக்கப்பட வேண்டும். நாமும் யோபு செய்ததைப்போல சகித்திருந்து, சாத்தானைப் பொய்யனாக நிரூபித்து, கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்.—11/15, பக்கம் 20.

◻மூப்பர் குழு ஒன்றின் அக்கிராசனர் ஒவ்வொரு மூப்பருக்கும் எப்படி சரியான அங்கீகரிப்பைக் காட்ட முடியும்?

நிகழ்ச்சிநிரலில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளின்பேரிலும் கவனமாக, ஜெபத்தோடு சிந்திப்பதற்காக மற்ற மூப்பர்களுக்கு நேரத்தை அனுமதிக்கும் வகையில், கூடுமானவரை அக்கிராசனர் நிகழ்ச்சி நிரலை வெகு முன்பாகவே கொடுக்கவேண்டும். மூப்பர்கள் கூட்டத்தில், மூப்பர்களுடைய கருத்தை உருவமைக்க முயலாமல், கலந்தாலோசிப்பின்கீழ் இருக்கிற காரியங்களை ‘பயமின்றி பேச’ உற்சாகப்படுத்துவார். (1 தீமோத்தேயு 3:13)—12/1, பக்கம் 30.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்