உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள்—ஜாம்பியா
மிகப் பெரிய, 1,200 மீட்டர் உயரமான ஒரு பீடபூமிக்கு மேல் அகலமான, மேடுபள்ளமுடைய சமவெளிகள் இருக்கின்றன—இதுதான் ஜாம்பியா, தென்மத்திய ஆப்பிரிக்காவின் மையப்பகுதியிலுள்ள ஒரு நாடாகும். வடக்கிழக்கில், மச்சிங்கா மலைகள் 2,100 மீட்டர் வரை உயர்ந்திருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற விக்டோரியா அருவி மீது பிரமிக்கத்தக்க விதத்தில் இரைச்சலிடும் பெரிய ஸாம்பஸி நதியானது, நிலஞ்சூழ்ந்த இந்நாட்டின் தென் எல்லையின் பெரும்பகுதியை உண்டுபண்ணுகிறது. 70-க்கும் மேற்பட்ட வித்தியாசமான மனிதயினத் தொகுதிகளைக் கொண்ட அங்குள்ள மக்கள் பெரும் கதம்பமாக இருக்கிறார்கள். இங்கு எட்டுப் பிரதான மொழிகள் பேசப்படுகின்றன, ஆனால் வேறுபலவும் இருக்கின்றன.
1911-ல் வித்தியாசப்பட்ட ஒரு மொழி ஜாம்பியாவில் பிடிகொள்ளத் தொடங்கி பரவியது. விஜயம் செய்யும் ஆட்கள் வேதாகமங்களின்பேரில் படிப்புகள் என்ற ஆங்கில புத்தகங்களைக் கொண்டுவந்தனர், அது முதல் யெகோவாவின் சாட்சிகள் ஜாம்பியாவில் பைபிள் சத்தியத்தின் “சுத்தமான பாஷை”யைப் பரவச்செய்ய பிரயாசப்பட்டிருக்கின்றனர். (செப்பனியா 3:9) இறந்தவரின் நிலைமையைப் பற்றிய வேதப்பூர்வமற்ற நம்பிக்கைகளே விசேஷமாகச் சவால் நிறைந்தவையாக இருக்கின்றன. சத்தியத்தைக் கற்றவுடன், மூடநம்பிக்கைகள் எப்படித் தங்களை அடிமைப்படுத்தியிருக்கின்றன என்பதை மக்கள் உணரும்போது, பலன் விடுதலையளிப்பதாகவே இருக்கிறது!—யோவான் 8:32.
எடுத்துக்காட்டாக, ஓர் உண்மையுள்ள சகோதரி அறிக்கையிடுகிறார்: “திடீரென என் மாமா இறந்தபோது, ஜாம்பியாவின் யுனைடெட் சர்ச்சில் தீவிர உறுப்பினராயிருந்த என் அம்மா மனங்குழம்பிப் போனார். ஒரு வாரம் நீடித்த ஈமச் சடங்குக்குப் பிறகு, அவர் எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள நான் அவர்கள் வசித்துவந்த கிராமத்துக்குப் போனேன். போனதும், வீட்டில் ஒரு வயதான மனிதனைப் பார்த்தேன்; அவர் புறப்பட்டுப் போனதும் யார் அந்த ஆள் என்று பாட்டியைக் கேட்டேன். அவர் ஒரு சூனியக்காரர் என்று அவர்கள் சொன்னார்கள். தன் சகோதரனுடைய ஆத்துமா சாந்தியடைய, அவருடைய மரணத்திற்காகப் பழிவாங்கும்படி அவரைப் பணம் கொடுத்து வரவழைக்கலாம் என்று அம்மா உத்தேசித்தார். அவர் சொல்கிற பிரகாரம், அது இப்போது ‘அப்படியே அலைவதாக’ நம்பினார்.
“சூனியக்காரருக்கு எப்படிப் பணம் கொடுப்பது என்று குடும்பத்தினர் நினைத்துக்கொண்டிருந்ததால் நான் வந்தது ஓர் ஆசீர்வாதமாக இருந்தது என்று பாட்டி மேலுமாகச் சொன்னார்கள். என்னிடம் அதற்குப் பணம் கேட்கும்போது, ஒரு கிறிஸ்தவளாக அதற்கு என்னால் பணம் கொடுக்க முடியாது என்று சாதுரியமாக விளக்கினேன். மரித்தோருக்கு எந்த யோசனைகளும் இல்லையாதலால், எந்த ஆத்துமாவும் ‘அலைந்துகொண்டில்லை’ என்று சங்கீதம் 146:4-ஐக் காட்டி அதிலிருந்து நான் அவரோடு நியாயவிவாதம் செய்தேன். பழிவாங்குதல் நமக்குரியதல்ல, யெகோவாவுக்குரியது என்பதைக் குறித்துக் காட்டக்கூடிய வசனமாகிய ரோமர் 12:19-ஐயும் நாங்கள் சிந்தித்தோம். அதற்குப் பிற்பாடு, யோவான் 5:28, 29-ல் இயேசு சொன்னதாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிற மரித்தோரின் நம்பிக்கையைப் பற்றி என் அம்மாவிடம் சொன்னேன். கடவுளுடைய வாக்குறுதிகளின்பேரில் எனக்கிருந்த பலமான விசுவாசத்தினால் அவர் கவர்ந்திழுக்கப்பட்டார். சீக்கிரத்தில் அவரும் ஒரு சாட்சியோடு படிக்கத் தொடங்கி வேகமாக முன்னேற்றம் செய்தார். தன்னுடைய முந்தைய மதத்தோடு வைத்திருந்த எல்லா தொடர்புகளையும் முறித்துக்கொண்டு, முழுக்காட்டுதலின் மூலம் கடவுளுக்கான அவர்களது ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்திக் காட்டினார். இப்போது அவர் ஒரு யெகோவாவின் சாட்சி.”
இன்னொரு சகோதரி அறிக்கையிடுகிறார்: “என் மாமியின் சவ அடக்கத்திற்கு நான் போயிருந்தேன். வந்ததும் பார்த்தால், மாமாவும் மாமா பையனும் சாப்பாடு சாப்பிடாமலிருந்தனர். என்னுடைய மாமி மரித்த நாள் முதல் அவர்கள் ஒன்றும் சாப்பிடவில்லை. சாப்பிடாததற்குக் காரணத்தைக் கேட்டால் சம்பிரதாயப்படி, அவர்கள் சமைப்பதற்குத் தீமூட்டக்கூடாது என்று சொன்னார்கள். நான் சமைத்துத்தர முன்வந்தேன், ஆனால் குடும்பத்தில் சில அங்கத்தினர்கள் இந்தப் புறமத பழக்கவழக்கத்தை மீறினேனென்றால், எல்லாருக்கும் பைத்தியம் பிடித்துவிடும் என்று பயந்தனர்!
“யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக பைபிள் லேவியராகமம் 18:30-ல் சொல்வதை மதிக்கிறேன் என்றும் வேதப்பூர்வமற்ற சம்பிரதாயங்களை அனுசரிப்பது கிடையாது என்றும் நான் விளக்கிச் சொன்னேன். பின்னர் மரித்தோரின் ஆவிகள் என்ற ஆங்கில சிற்றேட்டை அவர்களுக்குக் காண்பித்தேன். இதனால் அந்தத் தீவிர கருத்து வேறுபாடு தணிந்தது, நான் மாமாவுக்கும் இதர ஆட்களுக்கும் சமைத்துப்போட்டேன். எனக்கிருந்த தைரியத்தைக் கண்டு மரித்தோரின் உறவினர்கள் தொடப்பட்டு கூடுதலாகப் பைபிளைப் படிப்பதற்குச் சம்மதித்தனர். அவர்கள் ஏற்கெனவே முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக இருக்கின்றனர். முழுக் குடும்பமும் விரைவில் முழுக்காட்டுதல் எடுக்க எதிர்நோக்கியுள்ளது.”
அறியாமையுள்ள மக்களை அடிமைப்படுத்தும் மதவாதப் பொய்மைகளின் குழப்படியை, விசேஷமாக ஆழமாகப் பதிந்துள்ள கருத்துக்களை சத்தியமென்னும் சுத்தமான பாஷை புரட்டிப்போடும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம்! யெகோவாவின் ஆசீர்வாதத்துடன், பூமி முழுவதிலும் பரவிவருவதுபோல ஜாம்பியாவில் சுத்தமான பாஷை பரவிவருகிறது.—2 கொரிந்தியர் 10:4.
[பக்கம் 9-ன் பெட்டி]
நாட்டு விவரங்கள்
1994 ஊழிய ஆண்டு
சாட்சிபகருவோரின் உச்ச எண்ணிக்கை: 82,926
வீதம்: 107-க்கு 1 சாட்சி
நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர்: 3,63,372
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 10,713
சராசரி பைபிள் படிப்புகள்: 1,08,948
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 3,552
சபைகளின் எண்ணிக்கை: 2,027
கிளை அலுவலகம் லுஸாகா
[பக்கம் 9-ன் படம்]
லுஸாகாவின் புறப்பகுதியில் உவாட்ச் டவர் கிளை அலுவலக கட்டட வசதிகள்
[பக்கம் 9-ன் படம்]
லுஸாகாவிற்கு தெற்கில் உள்ள ஷிமபாலாவில் பிரசங்கிப்பது