“ராஜ்ய மன்றத்திற்கு என்னுடைய விஜயம்”
ஒரு மத ஆராதனைக்குச் சென்று, அதைப் பற்றிய அனுபவத்தை எழுதும் வேலை கல்லூரி மாணவி லாராவுக்குa கொடுக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளுடைய மத ஆராதனைக்குச் செல்ல தீர்மானித்து தன்னுடைய கட்டுரைக்கு அவள் இவ்வாறு பெயரிட்டாள்: “ராஜ்ய மன்றத்திற்கு என்னுடைய விஜயம்.” சாட்சிகளிடம் என்ன வித்தியாசத்தை லாரா கண்டாள்? அவள் குறிப்பிட்ட அநேக விஷயங்களில் பின்வருபவை சில:
பிள்ளைகள்: “பிள்ளைகளும் பெரியவர்களும் சேர்ந்தே இருந்தார்கள். நான் போயிருந்த பெரும்பாலான சர்ச்சுகளில், பிள்ளைகள் பெற்றோரை விட்டுவிட்டு சன்டே ஸ்கூலுக்குச் செல்ல வேண்டும்.”
இன ஒற்றுமை: “பொதுவாக, சர்ச்சுகளில் குறிப்பிட்ட இனத்தவரோ மரபினரோதான் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். . . . அந்தந்த இனத்தவர் குரூப் குரூப்பாக உட்காராமல், யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் பாகுபாடின்றி ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.”
வரவேற்கும் குணம்: “நிறைய பேர் என்னிடம் வந்து பேசினார்கள். . . . யாருடனாவது பைபிள் படிக்கிறேனா என்றும்கூட சிலர் என்னிடம் கேட்டார்கள். ஆனால், என்னை யாரும் வற்புறுத்தவில்லை. . . . என்னுடைய தீர்மானத்திற்கு விட்டுவிட்டார்கள்.”
காணிக்கைகள் இல்லை: “என்னை உண்மையிலேயே ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், யாரும் காணிக்கை வாங்கவில்லை. . . . நான் போயிருந்த சர்ச்சுகளில் எல்லாம் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் வகுப்பிலேயும் காணிக்கை வாங்கினார்கள்.”
உலகமுழுவதும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் சுமார் 90,000 இருக்கின்றன. உங்களுடைய வீட்டிற்குப் பக்கத்திலுள்ள மன்றத்திற்கு நீங்களும் சென்று பார்க்கலாமே!
[அடிக்குறிப்பு]
a மாற்றுப் பெயர்.