உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 8/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • ஜீவனுள்ள தேவனுடைய வழிநடத்துதலை பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இரத்தம்​—⁠கடவுள் சொல்வது என்ன?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 8/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்திய காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் மிக ஆர்வத்தோடு வாசித்தீர்களா? அப்படியானால், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களால் பதில் சொல்ல முடிகிறதா பாருங்களேன்:

• ஏசாயா 65:17-19-ல் சொல்லப்பட்டுள்ள ‘புதிய வானமும் புதிய பூமியும்’ பற்றிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம், யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பியதை மட்டுமே அல்லாமல் அதற்கு அப்பாலும் நடக்கவிருப்பதை குறிக்கிறது என்பதில் நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

ஏனென்றால், அப்போஸ்தலர்கள் பேதுருவும் யோவானும் தங்கள் கடிதங்களை முதல் நூற்றாண்டில் எழுதியபோது, வரவிருக்கிற ஆசீர்வாதங்களை குறிக்கும் எதிர்கால நிறைவேற்றத்தையே சுட்டிக்காட்டினர். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4)—4/15, பக்கம் 10-12.

• கொடூரமான, ராட்சதர்களைப் பற்றிய பண்டைய கிரேக்க கட்டுக்கதைகள் எங்கிருந்து வந்தன?

ஜலப்பிரளயத்திற்கு முன், மனித உருவில் பூமிக்கு வந்த சில தூதர்கள் கொடூரமானவர்கள்; அவர்கள் ஒழுக்கக்கேடான வாழ்க்கை நடத்தினார்கள் என்பதே உண்மை. இதற்கு கண், காது, மூக்கு வைத்து ஜோடனை பண்ணி, திரித்துக்கூறப்பட்டவையே இந்தக் கட்டுக்கதைகள். (ஆதியாகமம் 6:1, 2)—4/15, பக்கம் 27.

• திருமண நிகழ்ச்சிகளின்போது, முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய சில ஆபத்துகள் யாவை?

அளவுக்கதிமான மதுபானங்களும், காதை பிளக்கும் இசையும், முகம் சுளிக்க வைக்கும் டான்ஸும், கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியவை. அழைப்பிதழ் அழைப்பின்றி போகக் கூடாது. திருமண வைபவம் இரவு வெகு நேரத்திற்கு நீடிக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் முடிவடையும்படி மணமகன் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், திருமண வைபவம் முடியும்வரை நிகழ்ச்சிகளை கண்காணிக்க பொறுப்புள்ள கிறிஸ்தவர்களையும் அவர் ஏற்பாடு செய்ய வேண்டும்.—5/1, பக். 19-22.

• உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் “ஒலிவமரக் கன்றுகளைப் போல்” இருப்பார்கள் என சங்கீதம் 128:3-ல் குறிப்பிட்டுள்ளதின் அர்த்தம் என்ன?

பொதுவாக, ஒலிவ மரத்தின் அடிமரத்திலிருந்துதான் புதுக்கிளைகள் துளிர்க்கும். மரத்திற்கு வயதாகி கனி தராதபோது, இந்த புதுக்கிளைகள் அந்த மரத்தின் அடிபாகத்தைச் சுற்றி செழிப்பாக வளர்ந்து அதன் அடிமரமாகும். அதைப் போலவே, ஆவிக்குரிய கனி தரும் பிள்ளைகள் தங்களோடு சேர்ந்து யெகோவாவை சேவிப்பதில் பெற்றோர் சந்தோஷப்படுகின்றனர்.—5/15, பக்கம் 27.

• குடும்பத்தில் நல்ல ஐக்கியம் இருப்பதால் பிள்ளைகளுக்கு வரும் நன்மைகள் யாவை?

அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எப்படி பழகுவது, வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தராதரங்கள், மற்றவர்களோடு சந்தோஷமாக இருப்பது போன்றவற்றிற்கு குடும்பத்தில் உள்ள ஐக்கியம்தான் அஸ்திபாரம். இப்படிப்பட்ட சூழ்நிலை கடவுளோடும் நல்ல உறவை வளர்க்க உதவும்.—6/1, பக்கம் 18.

• எல்லாருமே கிறிஸ்தவ சகோதரர்கள்தான் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு கிழக்கத்திய தேசத்தில் என்ன செய்யப்பட்டது?

மூப்பர்களை மேன்மைக்குரிய பெயர்களால் அழைக்க வேண்டாம்; அவ்வாறு அழைப்பதற்கு பதில் அனைவரையும் சகோதரர்கள் என்றே பொதுவாக அழைக்க வேண்டும் என்று அந்த பிராந்தியத்தில் இருந்த எல்லா சபைகளுக்கும் அறிவிக்கப்பட்டது..—6/15, பக்கங்கள் 21, 22.

• இரத்தத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?

‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்பது பைபிளின் கட்டளை. எனவே, இரத்தத்தை முழுமையாகவோ அல்லது அதன் முக்கிய பாகங்களான பிளாஸ்மா, சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டயங்கள் போன்றவற்றை ஏற்றிக்கொள்ளக் கூடாது என்று நாம் நம்புகிறோம். (அப்போஸ்தலர் 15:28, 29) இந்த முக்கிய பாகங்களிலிருந்து சிறு சிறு கூறுகளை எடுத்து மருந்தாக உபயோகிக்கலாமா கூடாதா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய வேண்டும். பைபிள் என்ன சொல்கிறது என்பதையும் கடவுளோடு தனக்கு இருக்கும் உறவையும் மனதில்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.—6/15, பக்கங்கள் 29-31.

• இன்று உண்மையான மன அமைதியை கண்டுபிடிக்க முடியுமா?

கண்டுபிடிக்க முடியும். ஏசாயா 32:18-ல் விவரிக்கப்பட்ட சமாதானத்தை ஜனங்கள் கண்டடைவதற்கு, இயேசு கிறிஸ்து அவர்களிடம் உண்மை வணக்கத்தை சுட்டிக்காட்டுகிறார். இப்படிப்பட்ட சமாதானத்தை சொத்தாக பெற்றுக்கொண்டவர்கள் எதிர்காலத்தில் நிரந்தரமான சமாதானத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில் அப்போது சங்கீதம் 37:11, 29 நிறைவேற்றமடையும்.—7/1, பக்கம் 7.

• இன்றைய தேவராஜ்ய சரித்திரத்தில் ஜியார்ஜ் யங் எப்படிப்பட்ட சேவை புரிந்தார்?

பல நாடுகளில் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரகாசிப்பதற்காக 1917-ல் ஊழியத்தை ஆரம்பித்தார். கனடா தேசத்தின் பிராந்தியங்களில் எல்லாம் ராஜ்ய செய்தியின் ஒளியை பரப்பினார். அங்கிருந்து கரிபியன் தீவுகள், பிறகு பிரேசில், தென் அமெரிக்காவின் பல நாடுகள், மத்திய அமெரிக்கா, ஸ்பெய்ன், போர்த்துகல், முந்திய சோவியத் யூனியன், அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் சேவை செய்தார்.—7/1, பக்கங்கள் 22-7.

• “மரிப்பதற்காக ஞானஸ்நானம்” பெறுவது என்பதாக 1 கொரிந்தியர் 15:29-ல் (NW) குறிப்பிடுவதன் அர்த்தம் என்ன?

ஒரு கிறிஸ்தவன் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படும்போது, ஒரு வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்து, முடிவில் மரித்து பின்னர் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப் படுவார் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.—7/15, பக்கம் 17.

• தொலைந்து போன வருடங்கள் என்பதாக பவுலின் வாழ்க்கையில் விவரிக்கப்படும் வருடங்களில் அவர் என்ன செய்தார்?

சிரியா, மற்றும் சிலிசியா போன்ற இடங்களில் சபைகள் உருவாவதற்காக அல்லது இருந்த சபைகளை பலப்படுத்துவதற்காக அவர் கடுமையாக பிரயாசப்பட்டிருக்க வேண்டும். அவர் 1 கொரிந்தியர் 11:23-27-ல் விவரித்திருக்கும் வேதனைகளில் பெரும்பாலானவை இந்த சமயத்தில் அவருக்கு சம்பவித்திருக்கும். அப்படியென்றால், இந்த ‘தொலைந்து போன வருடங்களில்’ அவர் ஊழியத்தில் ஊக்கமாக ஈடுபட்டிருக்க வேண்டும்.—7/15, பக்கங்கள் 26, 27.

• நியாயமான எதிர்பார்ப்புகளை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்?

யெகோவா நம்மை புரிந்துகொள்கிறார் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. பதட்டப்படாமல் யோசிக்கவும் பணிவுடன் நடந்து கொள்ளவும் ஜெபம் உதவுகிறது. அனுபவம் வாய்ந்த நண்பரிடம் நமது பிரச்சினையைப் பற்றி பேசும்போது அதை தெளிவாக அணுகுவதற்கு உதவி கிடைக்கிறது.—8/1, பக்கங்கள் 29, 30.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்