உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 11/1 பக். 32
  • மரங்களை அழிப்போர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மரங்களை அழிப்போர்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 11/1 பக். 32

மரங்களை அழிப்போர்

பைபிள் காலங்களில், மரங்கள் விலைமதிப்புமிக்க பொருட்களாக கருதப்பட்டன. உதாரணமாக, தன்னுடைய அருமை மனைவி சாராளுக்காக ஆபிரகாம் ஒரு கல்லறையை வாங்கியபோது, சொத்தை மாற்றுவதற்குரிய ஒப்பந்தத்தில் மரங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன.​—⁠ஆதியாகமம் 23:15-18.

அதைப் போலவே இன்றும் மரங்கள் மிகவும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகின்றன. காடுகளை பாதுகாப்பதைக் குறித்து சர்வதேச அளவில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலகின் நிலைமை 1998 (ஆங்கிலம்) என்ற நூல் இவ்வாறு கூறுகிறது: “வெப்ப மண்டல காடுகளைப் பற்றி வடக்கத்திய நாடுகளில் வாழும் அநேகர் கவலைப்படுகிறபோதிலும், தங்களுடைய சொந்த நாடுகளிலுள்ள மிதவெப்ப மண்டல காடுகளே ஆங்காங்கே மிகவும் சிதறுண்டு கிடப்பதையும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் பற்றி அறியாமல் இருக்கலாம்.” ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற வடக்கத்திய நாடுகளிலுள்ள காடுகளின் ஆரோக்கியத்தை எது அச்சுறுத்துகிறது? காடுகளை அழிப்பதே என அநேகர் சுட்டிக்காட்டுகிறார்கள், ஆனால் மரங்களை ஒவ்வொன்றாக, இலை இலையாக அழிப்பதுபோல் அவற்றை மறைமுகமாக அழிக்கும் வேறுசில சக்திகளும் இருக்கின்றன. அவை யாவை? காற்று தூய்மைக்கேடும் அமில மழையுமே. இவை கொஞ்சம் கொஞ்சமாக மரங்களை பலவீனப்படுத்தி, புழுப்பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எளிதில் பலியாகும்படி செய்துவிடலாம்.

பூமியின் சூழியல் அமைப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சூழியலாளர்களும் அக்கறையுள்ள குடிமக்களும் பல பத்தாண்டுகளாக எச்சரித்திருக்கிறார்கள். 1980-களில், காற்று தூய்மைக்கேடு மற்றும் அமில மழையின் பாதிப்புகளைப் பற்றி ஜெர்மனியிலுள்ள விஞ்ஞானிகள் ஆராய்ந்த பிறகு, இந்த முடிவுக்கு வந்தார்கள்: ‘சுமார் 2000 ஆண்டுக்குள் ஒன்றும் செய்யப்படவில்லையென்றால், காடுகளை பழைய போட்டோக்களிலும் திரைப்படங்களிலும் மட்டுமே மக்கள் பார்த்து பரவசமடைய முடியும்.’ தன்னைத்தானே புதுப்பிக்கும் ஆற்றல் அந்தளவு பூமிக்கு இருப்பதால்தான், முன்னுரைக்கப்பட்ட பெரும்பாலான பாதிப்பின் மத்தியிலும் காடுகளால் இதுவரையில் தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது.

ஆனால், நீண்ட கால நோக்கில் பார்த்தால், நம்முடைய சூழியல் அமைப்பை பாதுகாப்பதற்கு கடவுளே மிகப் பெரியளவில் நடவடிக்கை எடுப்பார். “தம்முடைய மேல் வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்;” “மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.” ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பதாக’ அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். (சங்கீதம் 104:13, 14; வெளிப்படுத்துதல் 11:18) பூமியின் குடிகள் தூய்மைக்கேடில்லா உலகை என்றென்றும் அனுபவிக்கும்போது அது எவ்வளவு அருமையாக இருக்கும்!​—⁠சங்கீதம் 37:9-11.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்