உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 12/15 பக். 28-29
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • இதே தகவல்
  • அருமையாய் நேசிக்கப்படுகிற மனைவி
    குடும்ப வாழ்க்கை
  • திருமணத்தில் கீழ்ப்பட்டிருத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • ”பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • ஆழ்ந்த மரியாதையைப் பெறுகிற கணவன்
    குடும்ப வாழ்க்கை
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 12/15 பக். 28-29

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

மத பண்டிகை காரியங்களில் அவிசுவாசியான கணவர் பங்குகொள்கையில், கிறிஸ்தவ மனைவி எவ்வாறு கடவுளுக்கான உண்மைத்தவறாமையையும் கணவருக்கான கீழ்ப்படிதலையும் சமநிலைப்படுத்தலாம்?

அவ்வாறு அவள் செய்வதற்கு ஞானமும் சாதுரியமும் தேவை. ஆனால், இந்த இரண்டு கடமைகளையும் சமநிலைப்படுத்த முயற்சி செய்வதில் அவள் சரியானதையே செய்கிறாள். இதற்கு ஒத்த ஒரு சூழ்நிலையைக் குறிப்பிடுகையில், “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என இயேசு அறிவுரை கூறினார். (மத்தேயு 22:21) உண்மையில் அவர் அரசாங்க கடமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்; இந்த அரசாங்கங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கும்படி பின்னர் கிறிஸ்தவர்களுக்கு சொல்லப்பட்டது. (ரோமர் 13:1) எனினும், கடவுளுக்குரிய கடமைகளையும் கணவர் அவிசுவாசியாக இருந்தாலும் அவருக்கு கீழ்ப்படிய வேண்டிய வேதப்பூர்வ கடமையையும் மனைவி சமநிலைப்படுத்தும் விஷயத்திலும் அவருடைய அறிவுரையைப் பொருத்தலாம்.

ஒரு கிறிஸ்தவன் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு முதலாவது கடமைப்பட்டிருக்கிறான் என்பதையும் எல்லா சமயங்களிலும் அவருக்கு உண்மை தவறாமல் இருக்க வேண்டும் என்பதையும் பைபிள் வலியுறுத்துவதை அதை நன்கு அறிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். (அப்போஸ்தலர் 5:​29) இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உண்மை வணக்கத்தார் ஒருவர், கடவுளுடைய உயர்ந்த சட்டங்களை மீறுவதற்கு இடங்கொடுக்காமல், தலைமை ஸ்தானத்திலுள்ள அவிசுவாசியின் வேண்டுகோள்களுக்கு அல்லது வற்புறுத்துதல்களுக்கு இணங்கிப் போக முடியும்.

தானியேல் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மூன்று எபிரெயர்களிடம் படிப்பினைக்குரிய முன்மாதிரியை நாம் காண்கிறோம். அவர்களும் மற்றவர்களும் தூரா சமவெளிக்கு வரும்படி அவர்களுடைய அரசாங்க மேலதிகாரியான நேபுகாத்நேச்சார் கட்டளையிட்டார். பொய்மத வணக்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை அறிந்தவர்களாக இந்த மூன்று எபிரெயர்களும் அங்கு போவதைத் தவிர்க்க விரும்பியிருப்பார்கள். தானியேலால் அங்கு போகாமலிருக்க முடிந்தது, ஆனால் இந்த மூவராலோ அவ்வாறு செய்ய முடியவில்லை.a ஆகையால் அங்கு போவதற்கு அவர்கள் சம்மதித்தார்கள், ஆனால் எந்தத் தவறான செயலிலும் பங்குகொள்ளாதிருக்க உறுதிபூண்டார்கள்; அவ்வாறே அவர்கள் பங்குகொள்ளவுமில்லை.​—⁠தானியேல் 3:​1-​18.

அவ்வாறே, பண்டிகை காலங்களில் தன் கிறிஸ்தவ மனைவி தவிர்க்க விரும்புகிற ஏதோ ஒன்றை செய்யும்படி அவிசுவாசியான கணவர் கேட்கலாம் அல்லது வற்புறுத்தலாம். பின்வரும் சில உதாரணங்களைக் கவனியுங்கள்: அவரும் மற்றவர்களும் பண்டிகை கொண்டாடும் அந்த நாளில் உண்பதற்கு விசேஷித்த உணவை தயாரிக்க சொல்கிறார். அல்லது அன்றைய தினம் உறவினரின் வீட்டிற்கு விருந்துக்காக அல்லது வெறுமனே அவர்களை சந்திப்பதற்காக (மனைவி உட்பட) குடும்பத்தார் அனைவரும் போக வேண்டும் என வற்புறுத்துகிறார். அல்லது பண்டிகைக்கு முன்பே, தன் மனைவி கடைக்குச் செல்கையில், அந்த பண்டிகைக்குரிய சில விசேஷித்த உணவு பண்டங்களை, பரிசு கொடுப்பதற்கான பொருட்களை, அவற்றிற்கான கிஃப்ட் பேப்பரை அல்லது வாழ்த்து அட்டைகளை தனக்காக வாங்கி வரும்படி அவர் சொல்லலாம்.

மறுபடியுமாக, பொய்மத காரியங்களில் பங்கெடுக்காதிருக்கும் தன் தீர்மானத்தில் கிறிஸ்தவ மனைவி உறுதியாய் இருக்க வேண்டும், ஆனால் இப்படிப்பட்ட காரியங்களை செய்யும்படி கேட்கையில் என்ன செய்யலாம்? அவர் குடும்பத் தலைவராக இருக்கிறார், “மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்” என கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. (கொலோசெயர் 3:18) இந்த சந்தர்ப்பங்களில் கடவுளுக்கு உண்மைத்தவறாதவளாக இருந்துகொண்டு மனைவிக்குரிய கீழ்ப்படிதலை அவள் காட்ட முடியுமா? தன் கணவருக்குக் கீழ்ப்படிவது, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதோடு முரண்படுகையில் அதை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதை அவள் தீர்மானிக்க வேண்டும்.

சாதாரண நாட்களில், ஒரு குறிப்பிட்ட உணவை சமைத்துத் தரும்படி மனைவியை அவர் கேட்கலாம். அது அவர் விரும்பி புசிக்கும் உணவாக இருக்கலாம் அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்தில் அதை உண்ணும் பழக்கம் அவருக்கு இருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் அவரை நேசிப்பதையும் அவருடைய தலைமை ஸ்தானத்தை மதித்து நடப்பதையும் காட்ட அவள் விரும்புவாள். ஆனால் அவர் கேட்கிறார் என்பதற்காக அதையே அந்த பண்டிகை நாளில் அவள் தயாரிக்கலாமா? அன்றாட உணவு தயாரிப்பதைப்போல் கருதி நல்மனசாட்சியுடன் சில கிறிஸ்தவ மனைவிமாரால் அவ்வாறு செய்ய முடியலாம். கணவர் பண்டிகையின் முக்கியத்துவத்துடன் அதை சம்பந்தப்படுத்தி பார்த்தாலும் உண்மை கிறிஸ்தவர்கள் யாரும் நிச்சயமாகவே அவ்வாறு செய்ய மாட்டார்கள். அதைப் போலவே, ஒவ்வொரு மாதத்திலும் அல்லது வருடத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் தன் உறவினர்களை சந்திக்க செல்கையில் அவள் தன்னுடன் இருக்க வேண்டுமென்று கூப்பிடலாம். அது ஒரு பண்டிகை நாளாக இருந்தாலும் அவள் செல்லலாமா? கடையிலிருந்து வாங்கிவரும் பொருட்களை வைத்து அவர் என்ன செய்யப்போகிறாரென்று ஊகிக்காமல் கேட்ட பொருட்களை வாங்கிவர பொதுவாய் மனமுள்ளவளாக இருப்பாளா?

கிறிஸ்தவ மனைவி மற்றவர்களைக் குறித்து, அதாவது அவர்கள் மீதான பாதிப்பைக் குறித்து உண்மையிலேயே சிந்திக்க வேண்டும். (பிலிப்பியர் 2:4) அந்த மூன்று எபிரெயர்களும், தாங்கள் தூரா சமவெளிக்கு செல்வதை மற்றவர்கள் காணாதிருக்க வேண்டுமென எப்படி விரும்பியிருப்பார்களோ அதைப்போலவே, கிறிஸ்தவ மனைவி தன்னை பண்டிகையோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதற்கு இடமளிக்கும் எந்தக் காரியத்தையும் தவிர்க்க விரும்பலாம். எனவே, தன்னை நேசித்து மதித்து நடக்கிற மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, பண்டிகை சம்பந்தப்பட்ட சில காரியங்களை கணவரே கவனித்துக்கொள்ள முடியுமா என்பதை அறிந்துகொள்வதற்கு மனைவி அவரிடம் சாதுரியமாக நியாயங்காட்டி பேச முயற்சி செய்யலாம். மனைவி பொய்மத காரியங்களில் ஈடுபட மறுப்பதால், தங்கள் இருவரையுமே தர்மசங்கடமான நிலையில் வைக்கும் ஒரு சூழ்நிலையை தவிர்ப்பது ஞானமானது என்பதை கணவர் புரிந்துகொள்ளலாம். ஆம், முன்னதாகவே அமைதியாக கலந்து பேசிவிடுவது சமாதான தீர்வுக்கு வழிநடத்தலாம்.​—⁠நீதிமொழிகள் 22:⁠3.

இறுதியாக, அந்த மெய் கிறிஸ்தவர் உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்து, என்ன செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். அந்த மூன்று எபிரெயர்கள் செய்ததைப் போலவே, கடவுளுக்குக் கீழ்ப்படிவது முதலிடம் வகிக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:31) இதை மனதிற்கொண்டு, குடும்பத்திலோ சமுதாயத்திலோ அதிகாரமுடைய ஒருவர் கேட்டுக்கொள்ளும்போது இணங்கிப்போகாமல் என்னென்ன காரியங்களை செய்யலாம் என்பதைக் குறித்து ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவரும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

[அடிக்குறிப்பு]

a ஆகஸ்ட் 1, 2001, காவற்கோபுரம் இதழில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைக் காண்க.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்