சரித்திரத்திலேயே அதிமுக்கிய நிகழ்ச்சி
இயேசு கிறிஸ்துவின் மரணமே அது. ஏன் அது அவ்வளவு முக்கியமானது? அதற்கு அநேக காரணங்கள் உள்ளன.
இயேசு மரிக்கும்வரை உண்மையாய் இருந்தது, கடவுளிடம் உத்தமத்தன்மையை காத்துக்கொள்ள ஒரு மனிதனால் முடியும் என்பதை நிரூபித்தது.
கிறிஸ்துவின் மரணம், பரலோகத்தில் அவரோடு ஆட்சி செய்ய சிலருக்கு வாய்ப்பளித்தது. இன்னும் ஏராளமானோர் பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனை பெறும் வாய்ப்பையும் அளித்தது.
இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் மாலையில், புளிப்பில்லா அப்பத்தையும் சிகப்பு திராட்ச ரசத்தையும் அவருடைய அன்புள்ள மனித பலிக்கு அடையாளமாக உபயோகித்து “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என தம் சீஷர்களிடம் கூறினார். (லூக்கா 22:19) இந்த முக்கிய நிகழ்ச்சியை நீங்கள் நினைவுகூருவீர்களா?
இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பில் தங்களோடு சேர்ந்துகொள்ளும்படி யெகோவாவின் சாட்சிகள் உங்களை மனமார அழைக்கிறார்கள். இந்த வருட ஆசரிப்பு, மார்ச் 28, வியாழக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பின் நடைபெறும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஓர் ராஜ்ய மன்றத்திற்கு நீங்கள் செல்லலாம். உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை தொடர்புகொண்டு சரியான நேரத்தையும் இடத்தையும் அறிந்துகொள்ளுங்கள்.