“நீ சொல்வது சரிதான், வாழ்க்கை ரொம்ப அருமையானது!”
வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? போலந்திலுள்ள ஸ்ஜெசின் என்ற நகரில் வாழும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியான பதினெட்டு வயது மேக்டலீனா அதை தெரிந்துகொள்ள உயர்நிலைப் பள்ளியில் தன் சகமாணவி காட்டர்சீனாவுக்கு உதவினாள். காட்டர்சீனா தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிவந்தாள். ஆனால் மேக்டலீனா அவளிடம் பைபிளை பற்றி பேசியபோது உண்மையிலேயே ஆர்வத்தோடு கேட்டாள்.
பைபிளிலிருந்து மேக்டலீனா காண்பித்த விஷயங்கள் காட்டர்சீனாவுக்குப் பிடித்திருந்தாலும், அதை முழுவதுமாக அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேக்டலீனாவிடம் உண்மையான நண்பர்களைப் பற்றி பேசுகையில் காட்டர்சீனா ஒரு சமயம் இவ்வாறு சொன்னாள்: “உன்கிட்ட பைபிள் இருக்கு. என்ன நெறிமுறைகளைப் பின்பற்றணும், உண்மையான நண்பர்கள் எங்கே கிடைப்பாங்க என்பதெல்லாம் உனக்கு தெரியும். ஆனால் இப்போதைக்கு அந்த நெறிமுறைகளை எல்லாம் ஏத்துக்க முடியாம இருக்கிறவங்கள பத்தி என்ன சொல்ற?”
காட்டர்சீனா இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு சென்றாள்; அதுவே ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது. அங்கே அவள் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தைப் பார்க்க சென்றாள். அங்கு அவளுக்குக் காட்டப்பட்ட அன்பு அவளை வெகுவாக நெகிழ வைத்தது. அவளுக்காக ஒருவர் கதவை திறப்பது, அவள் சொல்வதை உண்மையான அக்கறையோடு கேட்பது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன.
விடுமுறைக்கு பின் செப்டம்பர் 2001-ல் மறுபடியும் ஸ்கூல் திறந்தபோது காட்டர்சீனா தவறாமல் பைபிளைப் படிக்க முடிவு செய்தாள். கற்றுவரும் பைபிள் நியமங்களை அவள் அதிகமதிகமாக மதித்து வருகிறாள், அவற்றை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றவும் ஆரம்பித்திருக்கிறாள். அண்மையில், மேக்டலீனாவிடம் இவ்வாறு மனம்விட்டு சொன்னாள்: “புதிய ஒரு வாழ்க்கையை தொடங்குவது போல இருக்கிறது.” செல் ஃபோனில் அவள் இந்த செய்தியையும் அனுப்பியிருந்தாள்: “இன்றைய படிப்புக்காக உனக்கு கோடி நன்றி! நீ சொல்வது சரிதான், வாழ்க்கை ரொம்ப அருமையானது! இதற்கு யாருக்கு நன்றி சொல்வது என்று அறிந்திருப்பதோ அற்புதமானது.”