உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 4/1 பக். 3
  • 666-வெறும் புதிரல்ல

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 666-வெறும் புதிரல்ல
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இதே தகவல்
  • மூர்க்க மிருகத்தையும் அதின் முத்திரையையும் அடையாளம் காணுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • கடும் மூர்க்கத்தனமான இரண்டு மிருகங்களுடன் போராடுதல்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • வெளிப்படுத்துதல்—கடவுளுடைய எதிரிகளைப் பற்றி என்ன சொல்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • “சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை” யெகோவா வெளிப்படுத்துகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 4/1 பக். 3

666-வெறும் புதிரல்ல

‘[அந்த மூர்க்க மிருகம்] அதின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.’​—⁠வெளிப்படுத்துதல் 13:17, 18.

666 என்ற புதிர் நிறைந்த முத்திரை தாங்கிய மூர்க்க மிருகத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைப் போல் வேறெந்த பைபிள் விஷயமும் மக்கள் மத்தியில் அந்தளவு ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. டெலிவிஷன், இன்டர்நெட், திரைப்படங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் என எல்லா மீடியாக்களிலும் இந்த மிருகத்தின் முத்திரை அடிபட்டிருக்கிறது, கணக்குவழக்கற்ற ஊகிப்புகளுக்கும் வழிநடத்தியிருக்கிறது.

666 என்பது பைபிளில் வரும் அந்திக்கிறிஸ்துவின் முத்திரை என சிலர் நம்புகின்றனர். வேறு சிலரோ, அது ஏதோவொரு கட்டாயமான அடையாளம் என நினைக்கின்றனர்; அதாவது அம்முத்திரையை பெற்றிருப்பவரின் உடலில் பச்சைக்குத்தப்பட்டிருக்கும் அல்லது அதன் ரகசிய குறியீடு கொண்ட மைக்ரோசிப் அவரது உடலில் பொருத்தப்பட்டிருக்கும் என கூறுகின்றனர்; அது ஒருவரை அந்த மிருகத்தின் ஊழியக்காரனாக அடையாளம் காட்டும். இன்னும் சிலரோ, 666 என்ற எண் கத்தோலிக்க போப்பாதிக்கத்தை குறிக்கிறது என சொல்கின்றனர். போப்பின் அதிகாரப்பூர்வ பட்டப்பெயர் Vicarius Filii Dei (தேவ குமாரனின் உதவியாளர்) என்பதாகும். இந்தப் பட்டப்பெயரின் ஒரு வடிவிலுள்ள எழுத்துக்களுக்கு ரோம எண்களைப் போட்டு, அவற்றை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து 666 என்ற எண்ணை கணக்கிடுகின்றனர். அதோடு, ரோம பேரரசனாகிய டையோகிளிஷன் என்ற லத்தீன் பெயரிலிருந்தும், நீரோ சீஸர் என்ற பெயரின் எபிரெயு வடிவத்திலிருந்தும் இதே போன்ற எண்ணை பெறலாம் என வேறு சிலர் வாதாடுகின்றனர்.a

ஆனால் இந்தக் கற்பனை விளக்கங்களெல்லாம் அந்த மிருகத்தின் அடையாளத்தைப் பற்றி பைபிள் சொல்வதிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. இதைத்தான் பின்வரும் கட்டுரையில் நாம் ஆராயப் போகிறோம். தற்போதைய ஒழுங்குமுறையை கடவுள் அழிக்கும்போது அந்த முத்திரையைப் பெற்றவர்கள் அவருடைய கோபத்திற்கு ஆளாவார்கள் என பைபிள் வெளிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 14:9-11; 19:20) ஆகவே, 666 என்ற எண்ணின் அர்த்தத்தை விளங்கிக் கொள்வதில், வெறுமனே ஒரு புதிருக்கு விடை காண்பதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டுள்ளது. இந்த முக்கியமான விஷயத்தைப் பொறுத்தவரை, அன்பின் உருவாகவும் ஆன்மீக ஒளியின் ஊற்றாகவும் விளங்கும் யெகோவா தேவன் தமது ஊழியர்களை இருளில் தள்ளாட விடவில்லை.​—⁠2 தீமோத்தேயு 3:16; 1 யோவான் 1:5; 4:8.

[அடிக்குறிப்பு]

a எண்சோதிடம் பற்றிய தகவலுக்கு, தயவுசெய்து அக்டோபர் 8, 2002 தேதியிட்ட விழித்தெழு! இதழைக் காண்க.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்