உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 12/15 பக். 32
  • ‘மதிப்புமிக்க பரிசு’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘மதிப்புமிக்க பரிசு’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 12/15 பக். 32

‘மதிப்புமிக்க பரிசு’

பெ ல்ஜியம் நாட்டின் முன்னாள் பிரதமர், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்a புத்தகத்தை இப்படித்தான் விவரித்தார். அவருடைய அயலகத்தார் ஒருவர் நட்பு முறையில் அவரைச் சந்தித்து இப்புத்தகத்தைக் கொடுத்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். பிற்பாடு, நன்றி தெரிவிக்கும் வண்ணமாக அவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்: “நீங்கள் என்னை நட்பு முறையில் சந்தித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் கொடுத்த மதிப்புமிக்க பரிசோ என்னை ரொம்பவே கவர்ந்தது; அதாவது ‘மிகப்பெரிய மனிதரைப்’ பற்றியே முழுக்க முழுக்க எழுதப்பட்டுள்ள அந்தப் புத்தகம் என்னை ரொம்பவே கவர்ந்தது.”

இந்த முன்னாள் பிரதமர் அப்புத்தகத்தை ஆராய்ந்து படித்த பிறகு இம்முடிவுக்கு வந்திருக்கிறார். அதைப் பின்வருமாறு எழுதினார்: “சுவிசேஷங்களில் உள்ள விஷயங்களை மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு, இயேசு கிறிஸ்து சொன்ன நியதிகளின்படி வாழ்ந்தால், இந்த உலகத்தின் நிலை இப்படி இருக்காது. பாதுகாப்பு பேரவையின் அவசியமும் நமக்கு இருக்காது. தீவிரவாத தாக்குதல்கள் இருக்காது. வன்முறைக்கும் இடமிருக்காது.” இதெல்லாம் ஏதோ பகல்கனவுபோல் தோன்றுவதாக அவர் சொன்னாலும், தன் அயலகத்தார் தன்னைச் சந்திக்க வந்ததை தான் மிகவும் மெச்சுவதாகத் தெரிவித்தார்.

அக்கடிதத்தில் அவர் தொடர்ந்து எழுதியிருந்ததாவது: “நல்லெண்ணம் படைத்த பாராட்டத்தக்க ஒரு மக்கள் தொகுதியின் பாகமாக நீங்கள் இருக்கிறீர்கள்; இந்த உலகில் நடப்பதெல்லாம் நன்மையென்றும் நீங்கள் சொல்வதில்லை, எல்லாமே தீமையென்றும் நீங்கள் சொல்வதில்லை; மாறாக, மனிதர் நல்ல நிலையை அடைவார்கள், மற்ற காரியங்களும்கூட நல்ல நிலையை அடையும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.”

மனித முயற்சிகளால் அல்ல, கடவுளின் தலையீட்டால் மட்டுமே கடைசியில் சிறந்ததோர் உலகம் உருவாகும் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். மிகப்பெரிய மனிதராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற அவர்கள் முயலுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் சமீபத்தில் உங்களைச் சந்தித்தார்களா? எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதரைப் பற்றிய சுவாரஸ்யமான உரையாடலை அவர்களுடன் நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். அந்த முன்னாள் பிரதமரின் மனதைக் கவர்ந்த அப்புத்தகத்தை உங்களுக்குத் தருவதிலும் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்