உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 6/15 பக். 32
  • புத்திசாலித்தனமான தீர்வு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புத்திசாலித்தனமான தீர்வு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 6/15 பக். 32

புத்திசாலித்தனமான தீர்வு

மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் மூன்று இளைஞர்களுக்குத் தங்களுடைய பகுதியில் நடக்கவிருந்த மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள ஆசை. ஆனால், மாநாடு நடக்கும் இடமோ கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அந்தச் சாலையோ கரடுமுரடாகவும் புழுதிக்காடாகவும் இருந்தது. போதாக்குறைக்கு போக்குவரத்து வசதியும் கிடையாது. அப்படியென்றால், அவர்கள் எப்படி மாநாட்டிற்குச் செல்வார்கள்? மூன்று சைக்கிள்களை இரவல் வாங்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால், அதற்கும் வழியில்லாமல் போனது. ஏனென்றால், அந்தப் பயணத்திற்கு ஏற்ற சைக்கிள்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

செய்வதறியாமல் அவர்கள் தவிப்பதைப் பார்த்த உள்ளூர் சபை மூப்பர் தன்னுடைய சைக்கிளைத் தர முன்வந்தார். அது பழைய சைக்கிளாக இருந்தாலும் நல்ல நிலையில் இருந்தது. அவரும் மற்றவர்களும் முன்பெல்லாம் மாநாட்டிற்கு எப்படிச் சென்றார்கள் என்பதை அந்த மூப்பர் விளக்கினார். ஒரே சைக்கிளை வைத்து மூன்று பேரும் சமாளிக்க முடியும் என்று அவர் சொன்னார். அது சுலபமான தீர்வாகத் தெரிந்தாலும் அதற்காக நன்கு திட்டமிட வேண்டியிருந்தது. ஆனால், ஒரே சைக்கிளில் மூன்று பேரா, அது எப்படி?

இந்த இளம் சகோதரர்கள் சுட்டெரிக்கும் வெயிலைத் தவிர்ப்பதற்காக விடியற்காலையிலேயே கிளம்பினார்கள். தங்களுடைய சாமான்களையெல்லாம் சைக்கிளில் வைத்துக் கட்டினார்கள். முதலில் ஒருவர் சைக்கிளை ஓட்டிச் செல்ல மற்ற இருவரும் அவருக்குப் பின் வேக வேகமாக நடந்து சென்றார்கள். கிட்டத்தட்ட 500 மீட்டர் ஓட்டிச் சென்றபிறகு, அவர் சைக்கிளை ஒரு மரத்தின்மீது சாய்த்து வைத்தார். அதே சமயத்தில் மற்ற இரு சகோதரர்களின் கண்ணில்படும்படியாகவும் அதை நிறுத்தி வைத்தார்; இதன்மூலம் அதை யாரும் திருடிவிடாமல் பார்த்துக்கொண்டார். பிறகு அவர் நடக்க ஆரம்பித்தார்.

மற்ற இரண்டு சகோதரர்கள் சைக்கிள் நிற்கும் இடத்திற்கு வந்தவுடன் அவர்களில் ஒருவர் சைக்கிளை ஓட்டிச் செல்ல மற்றொருவர் அடுத்த 500 மீட்டர் நடந்து சென்றார். இப்படியே ஒருவர் மாற்றி ஒருவராகச் சென்றார்கள். சரியாக திட்டம்போட்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டதால் அவர்கள் மூவரும் 90 கிலோமீட்டருக்குப் பதிலாக 60 கிலோமீட்டரே நடக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. மாநாட்டில் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளைச் சந்தித்ததோடு ஆன்மீக விருந்தையும் ருசித்து மகிழ்ந்தார்கள். (உபா. 31:12) இந்த வருடம் உங்களுடைய பகுதியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள நீங்களும் முழுமுயற்சி எடுப்பீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்