பைபிள் தரும் பதில்கள்
மரித்தவர்களை மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
மரித்தவர்கள் ஒன்றும் அறியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் மரணத்தை பைபிள் தூக்கத்திற்கு ஒப்பிடுகிறது. என்றாலும், உயிரைப் படைத்த கடவுளுக்கு மரித்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்புவது கடினமல்ல. அதற்கு ஆதாரமாகத்தான் இயேசுவுக்குக் கடவுள் சக்தி அளித்து அநேகரை உயிர்த்தெழுப்ப செய்தார்.—பிரசங்கி 9:5; யோவான் 11:11, 43, 44-ஐ வாசியுங்கள்.
எந்த அர்த்தத்தில் மரணம் தூக்கத்திற்கு ஒப்பிடப்படுகிறது?
உயிரோடு எழுப்ப நினைக்கும் ஒவ்வொரு நபரையும் கடவுள் நீதியான ஒரு புதிய உலகில் உயிர்த்தெழுப்ப போவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். அதை அவருடைய உரிய நேரத்தில் செய்வார். தம்முடைய சக்தியைப் பயன்படுத்தி மரித்தோரை உயிர்த்தெழுப்ப சர்வ வல்லமையுள்ள கடவுள் ஆவலோடு இருக்கிறார்.—ஏசாயா 25:8-ஐ வாசியுங்கள்.
மரித்தவர்கள் எப்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
உயிர்த்தெழுந்து வருபவர்களால் தங்களையும் தங்கள் நண்பர்களையும் குடும்பத்தாரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மரித்தவர்களுடைய உடல் அழுகி போயிருந்தாலும் அவர்களுக்குப் புதிய உடலைக் கொடுத்து, உயிர்த்தெழுப்ப கடவுளால் முடியும்.—1 கொரிந்தியர் 15:35-38-ஐ வாசியுங்கள்.
சிலர் பரலோகத்தில் வாழ உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 20:6) ஆனால், அநேகர் பூஞ்சோலையான பூமியில் வாழ உயிர்த்தெழுப்பப்படுவார்கள். என்றென்றும் வாழும் எதிர்பார்ப்போடு புதியதோர் ஆரம்பத்தைக் கொண்டிருப்பார்கள்.—சங்கீதம் 37:29; அப்போஸ்தலர் 24:15-ஐ வாசியுங்கள். (w13-E 10/01)
[பக்கம் 16-ன் படம்]
கூடுதல் பைபிள் கேள்விகளுக்கு ஆன்லைனில் பதில் தெரிந்துகொள்ளுங்கள்