உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 10/1 பக். 16
  • பைபிள் தரும் பதில்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் தரும் பதில்கள்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • இதே தகவல்
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • ஜெபம் செய்ய இயேசு நமக்குக் கற்பிக்கிறார்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
மேலும் பார்க்க
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 10/1 பக். 16
வயதான ஒருவர் ஜெபம் செய்கிறார்

பைபிள் தரும் பதில்கள்

நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

நம்முடைய கவலைகளைப் பற்றி மனந்திறந்து பேச வேண்டும் என்று யெகோவா தேவன் எதிர்பார்க்கிறார். (லூக்கா 18:1-7) நம்மீது அவருக்கு அக்கறை இருப்பதால் நாம் சொல்வதைக் கேட்கிறார். தம்மிடம் பேசும்படி நம் பரலோக அப்பாவே அழைக்கும்போது, நாம் அவரிடம் பேசாமல் இருக்கலாமா?—பிலிப்பியர் 4:6-ஐ வாசியுங்கள்.

நம்முடைய தேவைகளை மட்டுமே கடவுளிடம் கேட்பது ஜெபம் அல்ல. கடவுளுடைய நெருங்கிய நண்பராக ஆவதற்கு ஜெபம் உதவுகிறது. (சங்கீதம் 8:3, 4) தினமும் நம்முடைய உணர்ச்சிகளை அவரிடம் கொட்டும்போது, நாம் அவருடைய நெருங்கிய நண்பராக ஆகலாம்.—யாக்கோபு 4:8-ஐ வாசியுங்கள்.

நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

ஜெபம் செய்யும்போது, வீண் வார்த்தைகளைச் சொல்லி அலப்புவதையோ மனப்பாடம் செய்த ஜெபங்களைச் சொல்வதையோ கடவுள் விரும்புவதில்லை. அதேசமயம், முட்டிபோட்டுக்கொண்டு அல்லது நின்றுக்கொண்டுதான் ஜெபம் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், நாம் அவரிடம் மனம்விட்டு பேச வேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறார். (மத்தேயு 6:7) உதாரணத்திற்கு பைபிள் காலங்களில் வாழ்ந்த அன்னாள், தன் மனதை வாட்டிய ஒரு பிரச்சினையைப் பற்றி ஜெபம் செய்தாள். அவளுடைய பிரச்சினை தீர்ந்தபோது அவள் மனந்திறந்து கடவுளுக்கு நன்றி சொன்னாள்.—1 சாமுவேல் 1:10, 12, 13, 26, 27; 2:1-ஐ வாசியுங்கள்.

ஜெபம் என்பது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மிகப் பெரிய பரிசு! சர்வலோகத்தையும் படைத்த கடவுளிடம் நம் கவலைகளை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் நமக்காகச் செய்திருக்கும் எல்லா விஷயங்களுக்காகவும் நன்றி சொல்லலாம், அவரைப் புகழ்ந்து பாடலாம். ஆகவே, நாம் ஜெபம் செய்ய ஒருநாளும் தவறக்கூடாது.—சங்கீதம் 145:14-16-ஐ வாசியுங்கள். (w14-E 07/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில், 17-ம் அதிகாரத்தைப் பாருங்கள்

www.jw.org-லும் டவுன்லோட் செய்யலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்