பொருளடக்கம்
அக்டோபர் 23-29, 2017
3 சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள்
சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதில் யெகோவாதான் தலைசிறந்த உதாரணம். அவருடைய உதாரணத்தை மனிதர்கள் எப்படிப் பின்பற்றலாம்? என்ன நடைமுறையான வழிகளில் நீங்கள் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளலாம்?
அக்டோபர் 30, 2017–நவம்பர் 5, 2017
8 யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள்
கரிசனை காட்டுவது என்றால் என்ன? கரிசனை காட்டுவதில் யெகோவாவும் இயேசுவும் பரிபூரண முன்மாதிரி வைத்திருக்கிறார்கள். என்ன நடைமுறையான வழிகளில் நாம் அவர்களைப் பின்பற்றலாம்? அப்படிச் செய்தால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
13 வாழ்க்கை சரிதை–ஆன்மீக முதிர்ச்சி உள்ளவர்களோடு வேலை செய்தது என் பாக்கியம்!
நவம்பர் 6-12, 2017
18 ‘நம் கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கிறது’
நவம்பர் 13-19, 2017
23 “கடவுளுடைய வார்த்தைக்கு . . . வல்லமை இருக்கிறது”
பைபிள் புதிய புதிய மொழிகளில் கிடைத்துக்கொண்டே இருப்பது ஏன் குறிப்பிடத்தக்கது? நம்முடைய மொழியில் கடவுளுடைய வார்த்தை கிடைத்திருப்பதற்காக நாம் எப்படி நன்றி காட்டலாம்? இந்தக் கட்டுரைகள், பைபிள்மேல் உள்ள நம் மதிப்பையும் அதைக் கொடுத்தவர்மேல் உள்ள நம் அன்பையும் அதிகரிக்கும்.
நவம்பர் 20-26, 2017
28 ‘தைரியமாக . . . செயல்படுங்கள்’
கிறிஸ்தவர்களுக்குத் தைரியம் தேவை. அன்று தைரியத்தைக் காட்டியவர்களின் உதாரணம் நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது? இளம் பிள்ளைகளும், பெற்றோர்களும், வயதான சகோதரிகளும், ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்களும் எப்படித் தைரியத்தோடு நல்ல செயல்களைச் செய்யலாம்?