அறிமுகம்
கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறதா?
பேரழிவு தாக்கும்போதோ மக்கள் வேதனைப்பட்டு சாகும்போதோ, கடவுள் அதைப் பார்க்கிறாரா, அதை நினைத்துக் கவலைப்படுகிறாரா என்று நாம் யோசிக்கலாம். பைபிள் இப்படிச் சொல்கிறது:
“யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன; ஆனால், யெகோவாவுடைய முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”—1 பேதுரு 3:12.
கடவுள் நமக்கு எப்படி உதவுகிறார் என்றும், வேதனைகளுக்கு முடிவுகட்ட அவர் என்ன செய்கிறார் என்றும் இந்தக் காவற்கோபுர பத்திரிகை விளக்கும்.