பொருளடக்கம்
3 தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—மியன்மாரில்
செப்டம்பர் 3-9, 2018
7 யாருடைய அங்கீகாரத்தை விரும்புகிறீர்கள்?
இன்று நிறைய பேர், சாத்தானுடைய உலகத்திலிருந்து கிடைக்கும் அங்கீகாரத்தையே விரும்புகிறார்கள். ஆனால், இருப்பதிலேயே சிறந்த அங்கீகாரத்தைப் பெறுவது, அதாவது யெகோவா கொடுக்கும் அங்கீகாரத்தைப் பெறுவது, ஏன் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, தன்னுடைய உண்மை ஊழியர்களை யெகோவா எப்படி அங்கீகரிக்கிறார் என்று, அதுவும், சிலசமயங்களில் எதிர்பார்க்காத விதங்களில் எப்படி அங்கீகரிக்கிறார் என்று, பார்ப்போம்.
செப்டம்பர் 10-16, 2018
12 உங்களுடைய கண்கள் யெகோவாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறதா?
இந்தக் கட்டுரையில், உண்மையுள்ள மனிதரான மோசே, ஏன் பாவம் செய்தார் என்றும் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போகும் பாக்கியத்தை ஏன் இழந்தார் என்றும் தெரிந்துகொள்வோம். அவர் செய்த பாவத்தை நாம் எப்படித் தவிர்க்கலாம் என்றும் பார்ப்போம்.
செப்டம்பர் 17-23, 2018
17 “யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?”
செப்டம்பர் 24-30, 2018
22 நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள்!
மனிதர்கள் எல்லாருமே யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள். அதனால், நாம் அவருக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் சிலர், யெகோவாவை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். முதல் கட்டுரையில், காயீன், சாலொமோன், மோசே, ஆரோன் போன்றவர்களிடமிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்வோம். இரண்டாவது கட்டுரையில், யெகோவாவின் மக்களாகிய நாம், அவருக்கு சொந்தமானவர்களாக இருப்பதற்காக நன்றியோடு இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம் என்று பார்ப்போம்.
27 ‘எல்லா விதமான மக்களுக்கும்’ கரிசனை காட்டுங்கள்
30 பலன் தரும் விதத்திலும் சுவாரஸ்யமாகவும் பைபிளைப் படிப்பது எப்படி?