அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: மார்ச்: ஆங்கிலத்தில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்கள் ரூ10. இந்திய மொழிகளில் ஒன்று ரூ5. (பல்வேறு மொழிகளில் அளிக்கப்படக்கூடிய இந்தப் புத்தகங்களின் பட்டியல் பிப்ரவரி 1988 நம் ராஜ்ய ஊழியம், “அறிவிப்புகள்” பகுதியில், கொடுக்கப்பட்டிருக்கிறது.) ஏப்ரல்: புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் என்ற ஆங்கில புத்தகம் நன்கொடை ரூ10. (இந்தப் பிரசுரம் இல்லாத இடங்களில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கவும்.) இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பாக பழைய 192 பக்க புத்தகம் ஒன்றுக்கு ரூ5. மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ40. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ20. மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. ஜூலை: விசேஷ அளிப்பாக கொடுக்கப்படும் 192 பக்கங்களைக் கொண்ட பழைய புத்தகங்களில் ஒன்று ரூ5. ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுர் (ஆங்கிலம்) தவிர, 32 பக்கங்களைக் கொண்ட மற்ற புரோஷுர்களில் எதையும் அளிக்கலாம்.
● காரியதரிசியும் ஊழியக் கண்காணியும் எல்லா ஒழுங்கான பயனியர்களுக்கான நடவடிக்கையையும் ஆராய வேண்டும். மணிநேரங்களை பூர்த்திச் செய்வதில் யாருக்காவது பிரச்னைகள் இருந்தால் உதவிகொடுக்கப்படும்படி மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனைகளுக்கு அக்டோபர் 1, 1988 மற்றும் அக்டோபர் 1, 1989 தேதியிட்ட சங்கத்தின் கடிதங்களை (S-201) பார்க்கவும். மேலும் அக்டோபர் 1986 நம் ராஜ்ய ஊழியம் சேர்க்கை, பாராக்கள் 12-20-ஐயும் காணவும்.
● ஞாபகார்த்த ஆசரிப்பு செவ்வாய் ஏப்ரல் 10, 1990 அன்று நடைபெறும். பேச்சு சீக்கிரமாக ஆரம்பிக்கப்படலாம் என்றாலும் ஞாபகார்த்த அப்பமும் திராட்சரசமும் பரிமாரப்படுவது, சூரிய அஸ்தமனத்துக்கு முன் துவங்கக்கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்பொழுது என்பதைத் தீர்மானிக்க உள்ளூர் தகவல் மையங்களிலிருந்து கேட்டறியுங்கள். அந்தத் தேதியில் வேறெந்த கூட்டமும் நடத்தப்படக்கூடாது. பொதுவாக உங்கள் சபைக்கூட்டங்கள் ஒருவேளை செவ்வாய்க் கிழமைகளில் நடத்தப்படுமானால், இன்று அந்தக் கூட்டங்களை வாரத்தின் மற்ற நாட்களில் மன்றம் கிடைக்கும் வசதிக்கேற்ப மாற்றி வைத்துக்கொள்ளலாம். உங்கள் ஊழியக்கூட்டம் பாதிக்கப்படுமானால் உங்கள் சபைக்குப் பொருத்தமான பகுதிகளை இன்னொரு ஊழியக் கூட்டத்தின் பகுதியோடு இணைத்துக்கொள்ளலாம்.
● வட்டார கண்காணிகள் “போலந்து மாநாடுகளிலே யெகோவாவில் களிகூருதல்” என்ற ஸ்லைட் படக்காட்சியை கூடுமானவரை சீக்கிரமாக ஏப்ரல் 1-க்குப் பிறகு கொடுக்க திட்டமிடலாம்.
● மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! —ஆங்கிலம், பெங்காலி, பர்மா, கன்னடம், மலையாளம்