கடவுளுடைய வார்த்தையில் விசுவாசத்தைக் கட்டியமைத்தல்
1 பலமான விசுவாசம் தேவைப்பட்ட ஒரு காலம் இருந்ததென்றால் அது இப்போதே ஆகும். அநேக ஆட்கள் விசுவாசமே இல்லாதவர்களாகவும் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர். அடிக்கடி மதம் மற்றும் அரசியல் தலைவர்கள் பொய்யான நம்பிக்கைகளை கட்டியெழுப்பியதன் காரணமாக அநேக ஆட்கள் வெளிப்படையாக நம்பிக்கையின்மையைக் காட்டுகின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்தபடி “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே” என்பது உண்மையே. (2 தெச. 3:2) என்றபோதிலும், விசுவாசம் என்பது யெகோவாவின் சாட்சிகளின் உடைமையாக இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றமடையும் என்ற முழு நம்பிக்கை நமக்கிருக்கிறது.
2 பலமான விசுவாசம் யெகோவாவின் சாட்சிகளை மற்ற ஆட்களிலிருந்து வித்தியாசப்பட்ட ஆட்களாக முனைப்பாய் தோன்றச் செய்கிறது. கடவுளுக்கு கனத்தைக் கொண்டுவருகையில் மற்றவர்களுக்கும் நமக்கும்கூட நன்மை பயக்கும் சிறந்த கிரியைகளைச் செய்ய அது தூண்டுவிக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசம், கடவுளுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்த அனுமதிப்பதினால் விளைவடைகிறது. கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாக பைபிளில் விசுவாசத்தை கட்டுவதன் மதிப்பை நவீன நாளைய மெய்க்கிறிஸ்தவர்களின் சர்வதேச சகோதரத்துவம் மெய்ப்பித்துக் காட்டுகிறது.—2 தீமோ. 3:16.
3 மற்றவர்கள் விசுவாசத்தைக் கட்டியமைக்க உதவுவதற்கான காரணம்: உயிர்கள் ஆபத்திலிருப்பதன் காரணமாக, தங்கள் விசுவாசத்தைக் கட்டியமைக்க மற்றவர்களுக்கு உதவுவதற்கு நமக்கு பலமான காரணம் இருக்கிறது. இதை மனதில் கொண்டவர்களாக ஜூலை மாதத்தில் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தை நாம் வெளி ஊழியத்தில் அளிப்போம். பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதை ஆட்கள் காணச் செய்ய உதவுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும். அது கடவுளுடைய வார்த்தைக்கு எதிராக நிறுத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளைக் கலந்தாலோசிக்கிறது மற்றும் தவறென நிரூபிக்கிறது. பின்வருவன போன்ற பல கேள்விகளுக்கு அது திருப்திகரமான பதில்களைக் கொடுக்கிறது: பைபிள் விஞ்ஞானபூர்வமற்றதா? அது தன்னில் தானே முரண்படுகிறதா? அது வெறும் பழங்கதையும் கட்டுக்கதையுமா? பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் அற்புதங்கள் உண்மையில் சம்பவித்தனவா? பைபிள் சரித்திரப்பூர்வமாக திருத்தமாக உள்ளதை புதைபொருள் ஆராய்ச்சி தவறென நிரூபித்திருக்கிறதா? அதோடுகூட இந்தப் புத்தகம் பைபிள் ஏவப்பட்டு எழுதப்பட்டதற்கான அநேக சிறந்த ஆதாரங்களைக் கொடுக்கிறது. அது பைபிள் தீர்க்கதரிசனங்களின் பிழையற்ற தன்மை மற்றும் எல்லாவற்றையும் உள்ளிட்ட அதன் அற்புதமான ஒத்திசைவுக்குக் கவனத்தைத் திருப்புகிறது.
4 அறிவாழமிக்க பைபிளின் நடைமுறையான ஞானமும் நல்லதற்காக ஆட்களை மாற்றும் அதன் வல்லமையும் பைபிள் கடவுடைய வார்த்தை என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்தின் ஒரு பகுதியே. இந்த ஆதாரத்தை ஆட்கள் கற்றுக் கொள்ள உதவுவதற்கு நாம் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம். இதைச் செய்ய, முதலாவதாக பைபிள் சொல்வதை அவர்கள் நம்புவதற்கு நாம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு நம்மிடமிருந்து பிரசுரத்தை பெற்றுக்கொண்டவர்களை உடனடியாக திரும்பப் போய் சந்தித்து வீட்டு பைபிள் படிப்பை அளித்து அதன் மூலம் விசுவாசத்தைக் கட்டியமைக்க உதவ நாம் விரும்புவோம்.
5 விசுவாசத்தைக் கட்டியமைக்க புத்தகம் உதவுகிறது: ஆதாரத்தை நேர்மையாக மதிப்பிடும்போது எந்த ஓர் உண்மை மனமுள்ள ஆளும் பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதை ஏற்றுக்கொள்ள தவறமாட்டார். இந்தப் புத்தகம் எளிதான, ஏற்றுக்கொள்ளும் முறையில் அந்த ஆதாரத்தை அளிக்கிறது. பைபிள் கடவுளுடைய வார்த்தையென ஏற்றுக்கொண்டு அதன் ஏவப்பட்டெழுதப்பட்ட புத்திமதிக்கிசைய வாழ்வதற்கு மற்றவர்களை உற்சாகப்படுத்த நாம் விரும்புகிறோம். அவ்வாறு செய்பவர்கள் பின்வரும் சங்கீதக்காரனின் இருதயப்பூர்வமான ஜெபத்தை சந்தோஷத்தோடு எதிரொலிப்பவர்களாக இருப்பார்கள்: “இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.”—சங். 119:159, 160.
6 “மிகுந்த உபத்திரவ”த்தினூடே பாதுகாக்கப்படுவதற்கு யெகோவாவுடைய வழியை நாடும் அனைவருக்கும் அவருடைய வார்த்தையாகிய பைபிள் மூலம் அவர் அன்பாக வழிநடத்துதலைக் கொடுக்கிறார். (மத். 24:21) பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தை ஜூலையில் ரூ12 என்ற நன்கொடைக்கு அளிப்பதன் மூலம் கடவுளுடைய வார்த்தையை வாசிக்கவும் படிக்கவும் மற்றவர்களை நாம் உற்சாகப்படுத்தலாம்.