கடவுளுடைய வார்த்தை—மனிதனுடையது அல்ல
1 “ஆகையால் நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான். . . . ” (1 தெச. 2:13) அப்போஸ்தலனாகிய பவுலுடைய வைராக்கியமுள்ள பிரசங்க வேலைக்கு என்னே ஒரு பிரதிபலன்!
2 பவுல் கடவுளுடைய வார்த்தையை மிக நன்றாக அறிந்திருந்தான், அதைக் குறித்து எவ்வித சந்தேகமுமிருக்க முடியாது. பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற இந்தப் புதிய புத்தகம் பைபிள் நிச்சயமாகவே யெகோவாவினுடைய வார்த்தையாக இருக்கிறதென்பதை உறுதியாக நிலைநாட்டுவதற்கும் விசுவாசத்தைக் கட்டியமைப்பதற்கும் மிகப் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது. பவுலுடைய வைராக்கியத்தைப் பின்பற்றுவதன் மூலம் தேடியலையும் ஆட்கள் அந்த வார்த்தையை கொண்டிருப்பதற்கும் அது அவர்களிலும்கூட கிரியை செய்வதற்கும் நாம் உதவக்கூடும்.
3 உங்களுடைய பிரசங்கத்தில் ஒருவேளை பின்வரும் ஒருசில குறிப்புகள் இணைத்துக் கொள்ளப்படலாம்: “எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்த விற்பனை புத்தகம்”, பக்கம்7; “பைபிள் நன்கு உறுதிசெய்யப்பட்ட வாக்கியங்கள்”, பக்கம் 19; “தொல்பொருள் ஆராய்ச்சியினால் என்னசெய்ய முடியும், என்ன செய்யமுடியாது”, பக்கம் 50; “நவீன கால ஆய்வுகள் தகுதியில் குறைப்பட்டவையாக காணப்பட்டிருக்கின்றன”, பக்கம் 56; “ஏன் இன்று அற்புதங்கள் நடைபெறுவதில்லை?”, பக்கம் 85. அனைத்தையும் சுருக்கமாகச் சொல்வதற்கு நடைமுறைக்குப் பொருந்தக்கூடிய குறிப்புகள் முக்கியமாக “பைபிளும் நீங்களும்” என்ற இறுதி அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
4 சங்கத்தின் அநேக பிரசுரங்கள் மூலமாய் காலத்துக்கேற்ற அபரிமிதமான ஆவிக்குரிய உணவுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! ஜூலை மாதத்தின்போது இந்த ஆவிக்குரிய மணிக்கல்லை திறம்பட்ட விதத்தில் அளிப்பதன் மூலம் இந்தப் போற்றுதலைக் காண்பிக்க நாம் தீர்மானமுள்ளவர்களாயிருப்போமாக.