கேள்விப் பெட்டி
◼முழுக்காட்டுதலைப் பெற்றிராத ஒரு பிரஸ்தாபி முழுக்காட்டப்படுவதற்காக அங்கீகரிக்கப்பட்டும் முன்பு எந்த அளவுக்கு வெளிஊழியத்தில் பங்குபெறுபவராக இருக்கவேண்டும்?
முழுக்காட்டுதல் பெறாத ஒரு பிரஸ்தாபியாக இருக்க தகுதிபெறும் ஒருவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பதற்குரிய தன்னுடைய பலமான ஆவலை பல்வேறு வழிகளில் ஏற்கெனவே நடப்பித்துக் காட்டுபவராக இருக்கிறார். (சங்.110:3) வேதவசனங்களின் ஊக்கமான படிப்பு அவருடைய சிந்தனையில் மனநிலையில் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. யெகோவா தேவனை பிரியப்படுத்த வேண்டும், அவருடைய சித்தத்தை செய்ய வேண்டும் என்ற இருதயப்பூர்வமான ஆசையினால் தூண்டப்பட்டவராக இப்படிப்பட்ட பொறுப்புணர்ச்சியுள்ள பைபிள் மாணாக்கன் யெகோவாவின் ஜனங்களுடன் சபைக்கூட்டங்களிலும் அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் ஒழுங்காக கூட்டுறவு கொள்கிறார். (எபி. 10: 24, 25) இப்படிப்பட்ட கிறிஸ்தவ கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராவதோடுகூட அந்தக் கூட்டங்களில் பதில் சொல்வதன்மூலம் தன்னுடைய விசுவாசத்தை பகிரங்கமாக அறிக்கைச் செய்வதற்கு இருதயத்திலிருந்து உந்துவிக்கப்பட்டவராகவும் இருக்கிறார், மற்றும் ஒருவேளை தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் சேர்ந்தவராக இருக்கிறார்.—சங். 40:9, 10: நம் ஊழியம் பக். 73.
பைபிள் மாணாக்கர் ஒருவர் எப்பொழுது சத்தியத்ததைத் தழுவிக்கொள்கிறாரோ மற்றும் ராஜ்ய செய்திகளுக்கு மனமார மதிப்பைக் காட்டுகிறாரோ மற்றும் ராஜ்ய செய்திகளுக்கு மனமார மதிப்பைக் காட்டுகிறாரோ அப்பொழுது அவர் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குபெறும் சிலாக்கியத்தை கொண்டிருக்கலாம். இதுவே யெகோவாவின் சாட்சிகளுடைய பிரதான வேலை. (மத்.24:14; 28:19, 20; நம் ராஜ்யம் பக். 111) இவ்விஷயத்தில் பைபிள் படிப்பு நடத்தும் பிரஸ்தாபி மற்றும் மூப்பர்கள் ஆகிய இருவரும் அந்த மாணாக்கனின் முழு வாழ்க்கையும் கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளும் அதிக முக்கியமான உத்தரவாதத்தை உடையவர்களாக இருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவதற்கு அவருக்கு உண்மையான ஆவல் இருக்க வேண்டும், மற்றும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் பங்குபெறும் அந்தச் சிலாக்கியத்தை உயர்வாக மதிக்க வேண்டும்.—கலா. 6:6; ஆங். காவற். 88 11/15 பக். 17 (தமிழ் காவற். ஆகஸ்ட் 1989, பக். 20); நம் ஊழியம் பக். 98-9, 174.
ஒரு பைபிள் மாணாக்கன் நம்மோடு ஊழியத்தில் பங்குபெறும் தகுதியை அடைவது முதற்கொண்டு கண்ணீர் முழுக்காட்டுதலுக்காக தன்னை அளிக்கும் நிலையை அடையும்வரையில் அதிக நீண்ட காலம் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்குள்ளாக அவருடைய வாழ்க்கைப் போக்கு ஏற்கெனவே கிறிஸ்தவ நியமங்களுக்கு முழுவதும் இசைவான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்தப் பகிரங்க ஊழியத்தில் அவருக்கு அனுபவம் குறைவாக இருக்கிறது. வெளிஊழியத்தில் ஒழுங்கான மற்றும் வைராக்கியமான பங்கை கொண்டிருப்பதற்கு அவர் உறுதியாய் தீர்மானித்தவராக இருப்பதைக் காட்டுவதற்கு அவருக்குப் போதுமான காலம் கொடுக்கப்பட வேண்டும்.—சங். 40:8; ரோம. 10:9,10, 14, 15.
அந்த நபர் முழுக்காட்டுதல் பெற ஆயத்தமாவதற்குள்ளாக அவர் பெரும்பாலும் பெருமளவிற்கு மற்றவர்களோடு நற்செய்தியை ஒழுங்காக பகிர்ந்துகொள்பவராக வெளிஊழியத்தில் ஒவ்வொரு மாதமும் வெறும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்தைக் காட்டிலும் அதிகத்தைச் செலவழிப்பவராக இருக்க வேண்டும். (ஆங். காவற். 84 6/1 பக். 8 பா. 2) என்றாலும் முழுக்காட்டுதலுக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சூழ்நிலைமையையும் அதாவது அவர்களுடைய பின்னணி, வயது, குறைபாடுகள் மற்றும் அதுபோன்ற காரியங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நம் ஊழியம் பக்கம். 175-ல் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி குறிப்புகளால் மூப்பர்கள் வழிநடத்தப்பட வேண்டும்: தங்களுடைய இருதயத்தை யெகோவாவிடம் திருப்பியிருப்பவர்கள் பேரிலும் பைபிளின் அடிப்படை சத்தியங்களின் கருத்தை விளங்கிக்கொண்டிருப்பவர்கள் பேரிலும் பைபிளின் அடிப்படை சத்தியங்களின் கருத்தை விங்கிக்கொண்டிருப்பவர்கள்பேரிலும் நம்முடைய அக்கறை இருக்கிறது. முழுக்காட்டப்படுகிறவர்கள் உங்களுடைய அன்புள்ள உதவியினால், கிறிஸ்த ஊழியமாகிய இந்த முக்கிய வேலைநியமிப்பை நிறைவேற்றுவதற்குப் போதிய அளவு ஆயத்தம் செய்யப்பட்டவர்களாய் ஊழியத்தை ஏற்க ஊக்கமும் உதவியும் பெறுவர்.”—மத். 16:24; யோவான் 4:34; 1 பேதுரு 2:21.