உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/90 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 10/90 பக். 7

அறிவிப்புகள்

● பிரசுர அளிப்புகள்: அக்டோபர்: படைப்பு புத்தகத்தை ரூ35-க்கு அளிக்கலாம். சிறிய அளவு புத்தகம் ரூ20. (இது கிடைக்காத மற்ற மொழிகளில் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் பயன்படுத்தலாம்.) நவம்பர்: ஓராண்டு சந்தா விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் அல்லது இரண்டு பத்திரிகைகளுக்கும். ஒவ்வொன்றும் ரூ50. ஆறுமாத சந்தாவும் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கும் ஓராண்டு சந்தா ரூ25. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறுமாத சந்தா கிடையாது.) டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், திரித்துவம் அல்லது இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் புரோஷுருடன் சேர்த்து ரூ48. ஜனவரி: இளைஞர் கேட்கும் கேள்விகளும்—பலன் தரும் விடைகளும் புத்தகத்தை ரூ15-க்கு அளிக்கவும். (கையிருப்பில் இல்லாத இடங்களில் 192-பக்க பழைய புத்தகங்களின் விசேஷ அளிப்பு, இரண்டு ரூ12. ஒன்று ரூ6-க்கு அளிக்கவும்.) பிப்ரவரி, மார்ச்: பழைய 192-பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, இரண்டு ரூ12. ஒன்று ரூ6. ஏப்ரல்: என்றும் வாழலாம் புத்தகத்தை ரூ35-க்கும், சிறிய அளவு புத்தகம் ரூ20-க்கும் அளிக்கவும். இந்தப் பிரசுரங்கள் கையிருப்பில் இல்லையென்றால், 192-பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, இரண்டு புத்தகங்கள் ஒரு புத்தகத்தின் விலைக்கு அளிக்கலாம். இந்திய மொழிகளில், விசேஷ அளிப்பு புத்தகங்களில் ஒன்று பாதி விலைக்குக் கொடுக்கலாம்.

● ஜனவரி 1, 1991 துவங்கி வட்டார கண்காணிகள் செய்யும் விஜயத்தின்போது, வட்டார கண்காணி சபையின் காரியதரிசியோடும் கணக்கு ஊழியரோடும் சபையின் கணக்குகளை கவனித்துவரும் முறைகளை விமர்சனம் செய்வார். வட்டார கண்காணி அளிக்கும் இந்தத் தனிப்பட்ட உதவி, சபையின் கணக்கு பதிவுகளை சங்கத்தின் முறையின்படி கவனித்துவரவும், சரியான விதத்தில் கையாளவும் நிச்சயப்படுத்தும்.

● கல்கத்தா ஆங்கில மாநாடு, டிசம்பர் 20-23, 1990, மன்றத்தின் விலாசம்: Rabindra Saravar Stadium Pavilion Hall. Sarat Chatterjee Avenue, Calcutta 700 029.

கல்கத்தா பெங்காலி மாநாடு, டிசம்பர் 20-23, 1990, மன்றத்தின் விலாசம்: Mysore Association Hall, 94D Raja Basant Ray Road, Calcutta 700 029.

கெளஹாட்டி மாநாடு, ஜனவரி 3-6, 1991, மன்றத்தின் விலாசம்: Rabindra Bhavan, Near Diahali Pukhari, G.N.B. Road, Guwahati, Assam 781 001.

● அக்டோபர் 18-21, பூனாவில் நடைபெறும் மாவட்ட மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் (மராத்தி), வியாழன் மாலை 12:30 மணிக்குத் துவங்கும்.

● காவற்கோபுரம், விழித்தெழு! கட்டுரைகளைக் கொண்ட புரோஷுர்கள் வெளி ஊழிய அறிக்கையில் பத்திரிகைகளின் கீழ் அறிக்கை செய்யப்பட வேண்டும். துணைப் பயனியர் சேவை செய்பவர்கள் இவற்றை பயனியர் விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்று இது அர்த்தப்படுத்துகிறது. ஒழுங்கான, மற்றும் விசேஷ பயனியர்கள் எடுக்கும் பத்திரிகைகளுக்குச் செய்வதுபோலவே இவற்றிற்கு S-20 பாரத்தில் பயனியர் கிரெடிட் கேட்கப்படலாம். இந்த மதிப்புவாய்ந்த பிரசுரங்கள் மேலும் அதிக விநியோகிப்பைப் பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்