அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: ஜூலை: உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்? புத்தகம் ரூ12-க்கு. இது கிடைக்காத இடங்களில் ராஜ்யம் வருக புத்தகம் ரூ12-க்கு அளிக்கலாம். ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுரை தவிர, ஏதாவது ஒரு 32-பக்க புரோஷுர் ரூ3. அக்டோபர்: படைப்பு புத்தகம் ரூ35. சிறிய அளவு ரூ20. (இந்திய மொழிகளில்: என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம்.) நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் மற்றும் “பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?” (இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பு 192 பக்க புத்தகங்கள் பாதி விலைக்கு.) ஜனவரி: என்றும் வாழலாம் புத்தகம்.
● இந்த வருடம் மாநாடு மூன்று நாட்களுக்கு இருப்பதால், மாநாட்டு வாரத்தின்போது சபை புத்தகப் படிப்பை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.
● சபை புத்தக படிப்புகளில் அடுத்ததாக படிக்க வேண்டிய பிரசுரம், இரத்தம் உங்கள் உயிரை எவ்வாறு பாதுகாக்கும்? என்ற புரோஷுர் ஆகும். இதற்கான கேள்விகள் இந்த இதழ் நம் ராஜ்ய ஊழியத்தோடு சேர்க்கப்பட்டிருக்கிறது.
●1992 காலண்டர்கள், வருடாந்தர புத்தகம், வேதவாக்கியங்களை ஆராய்தல் ஆகியவற்றிற்கு ஜூலை 6-ம் தேதிக்குள் சபைகள் தங்கள் ஆர்டரை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதற்கான விசேஷ ஆர்டர் நமூனாக்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன.
● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (சிறிய பதிப்பு) —மலையாளம்
புரோஷுர்கள்:
விழித்தெழு! புரோஷுர் 8–1 —குஜராத்தி, மராத்தி
விழித்தெழு! புரோஷுர் 9–1 —குஜராத்தி
விழித்தெழு! புரோஷுர் 9–2 —குஜராத்தி
விழித்தெழு! புரோஷுர் 9–3 —குஜராத்தி
விழித்தெழு! புரோஷுர் 9–4 —குஜராத்தி
துண்டுப்பிரதிகள்:
நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்?(T-13) —ஒரியா
ராஜ்ய செய்தி (எண் 30) —சிந்தி
● கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:
உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் —ஆங்கிலம்
துண்டுப்பிரதிகள்:
யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன? (T-14) —மலையாளம், தமிழ்
சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை (T-15) —மலையாளம், தமிழ்
மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (T-16) —மலையாளம், தமிழ்