அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: நவம்பர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் அல்லது இரண்டுக்கும் ஓராண்டு சந்தா, ஒவ்வொன்றுக்கும் ரூ50. மாதம் இருமுறை வரும் பத்திரிகைகளுக்கு ஆறுமாத சந்தாவும் மாதாந்தர பத்திரிகைக்கு ஓராண்டு சந்தாவும் ரூ25. (மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு–மாத சந்தா கிடையாது.) டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் மற்றும் “பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?” ரூ60. (இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பு 192 பக்க புத்தகங்கள் இரண்டு ரூ12, அல்லது ஒன்று ரூ6.) ஜனவரி: என்றும் வாழலாம் புத்தகம் பெரிய அளவு ரூ40, சிறிய அளவு ரூ20. பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ரூ12. ஒரு பழைய 192 பக்க புத்தகம் ரூ6. ஏப்ரல்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ20. (இது கிடைக்காத மொழிகளில் பழைய விசேஷ–அளிப்பு புத்தகங்களை இரண்டை ரூ12-க்கு அல்லது ஒன்றை ரூ6-க்கு அளிக்கவும்.)
◼ மயன்மார் மொழியில் (பர்மீஸ்) இப்போது காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள் அளிக்கலாம். காவற்கோபுரம் பத்திரிகையின் மயன்மார் பதிப்பு மாதத்துக்கு இருமுறை பிரசுரிக்கப்படுகிறது, அந்த மொழியில் விழித்தெழு! மாதாந்தர பத்திரிகையாயிருக்கிறது.
◼ ஜனவரி மாதத்திலிருந்து வட்டார கண்காணிகளுக்கு புதிய பொதுப்பேச்சு “சந்தோஷமான மாநாட்டு பிரதிநிதிகள் கிழக்கு ஐரோப்பாவில் யெகோவாவை துதிக்கின்றனர்” என்ற தலைப்பில் இருக்கும். 1990-ம் ஆண்டு கோட காலத்தின் போது கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு தேசங்களில் நடந்த “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடுகளின் சிறப்பு அம்சங்களில் சிலவற்றை ஸ்லைடுகள் மூலம் இந்தப் பேச்சு தெளிவாக காண்பிக்கும்.
◼ நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ சபை கணக்குகளை டிசம்பர் 1-ம் தேதி தணிக்கை செய்ய வேண்டும், அல்லது அதற்குப் பின் விரைவில் செய்து முடிக்க வேண்டும்.
◼ நம் ராஜ்ய ஊழியம் நேபாலி மொழியில் அக்டோபர் 1991-லிருந்து அச்சடிக்கப்படுகிறது. தயவுசெய்து உங்கள் தேவைகளை ஆர்டர் செய்யுங்கள்.
◼ ஜனவரி 1992 பிரதியிலிருந்து கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் காவற்கோபுரம் பத்திரிகை மாதத்துக்கு இரு முறை அச்சிடப்படும். அடுத்த ஜனவரியிலிருந்து ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதிகளோடு தேவைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கும். ஆதலால் சபைகள் தங்களது தற்போதைய ஆர்டர்களை மாற்றம் செய்ய வேண்டும்.
◼ ஜனவரி 1992-லிருந்து குஜராத்தி மொழியில் விழித்தெழு! மாதாந்தர பத்திரிகையாக பிரசுரிக்கப்படும். இதற்காக உங்களுடைய ஆர்டர்களை தயவுசெய்து உடனடியாக அனுப்புங்கள்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
ஹிந்தி: உங்கள் உயிரை இரத்தம் எவ்வாறு காப்பாற்றும்?; நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?; கன்னடா: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? மலையாளம்: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? தமிழ்: உங்கள் உயிரை இரத்தம் எவ்வாறு காப்பாற்றும்?; நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?
◼ மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
ஆங்கிலம்: குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்; அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? தமிழ்: துண்டுப்பிரதிகள்: யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (T-14); சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை (T-15); மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (T-16)