அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் மற்றும் “பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?” ரூ60-க்கு. (இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பு 192 பக்க இரண்டு பழைய புத்தகங்கள் ரூ12-க்கு, ஒரு பழைய புத்தகம் ரூ6-க்கு.) ஜனவரி: என்றும் வாழலாம் புத்தகம். பெரிய புத்தகம் ரூ.40-க்கும் சிறிய புத்தகம் ரூ20-க்கும். பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ரூ12. இந்திய மொழிகளில்: 192-பக்க பழைய புத்தகம் ஒன்று ரூ6. ஏப்ரல்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ20. (இது கிடைக்காத மொழிகளில் பழைய விசேஷ–அளிப்பு புத்தகங்களை இரண்டு ரூ12-க்கு அல்லது ஒன்று ரூ6-க்கு அளிக்கவும்.)
◼ வரவிருக்கும் மாதங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் பத்திரிகைகளுக்காக சபைகள் தங்கள் ஆர்டர்களை அனுப்ப வேண்டும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் விசேஷ ஊழிய மாதங்களாக இருப்பதால், அநேகர் துணைப் பயனியர் ஊழியத்தில் ஈடுபடுவார்களாதலால், சபைகள் கையிருப்பில் போதியளவு பத்திரிகைகள் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
◼ சங்கத்தின் கடித உறைகளை உபயோகித்தல்: பச்சை எழுத்து விலாசத்தையுடைய உறைகள் விசேஷ பயனியர் அறிக்கைகளை அனுப்புவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். மற்ற வகை கடிதங்களுக்கு வேறு உறைகளைப் பயன்படுத்த வேண்டும், அவற்றை அறிக்கைகளுடன் சேர்த்து அனுப்பக் கூடாது. சபை ரிப்போர்ட் டெஸ்க் (Report Desk) உறைகளை சபை அறிக்கைகளை அனுப்புவதற்கு மட்டும் பயன்படுத்தவும்; மற்ற கடிதங்கள் இவற்றுடன் சேர்க்கப்படக் கூடாது.
◼கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
குஜராத்தி: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?; மராத்தி: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?; நேப்பாளி: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?; மரணத்தின் மேல் வெற்றி—அது உங்களுக்குச் சாத்தியமா? உருது: துண்டுப்பிரதி: சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (T-15)
◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
பெங்காளி: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி”; ஆங்கிலம்: எல்லா தேசங்களுக்கும் நற்செய்தி; மலையாளம்: குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்; “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி”; மராத்தி: குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்
◼ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:
ஆங்கிலம்: ஒரு புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்; குஜராத்தி: துண்டுப்பிரதிகள்: ராஜ்ய செய்தி (எண்.30); ராஜ்ய செய்தி (எண்.31); ராஜ்ய செய்தி (எண்.32); கன்னடம்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?; பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்; மலையாளம்: பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்; மராத்தி: துண்டுப்பிரதிகள்: ராஜ்ய செய்தி (எண்.30); ராஜ்ய செய்தி (எண்.31); ராஜ்ய செய்தி (எண்.32); நேப்பாளி: துண்டுப்பிரதி: ராஜ்ய செய்தி (எண்.31); பஞ்ஜாபி: விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை; துண்டுப்பிரதி: ராஜ்ய செய்தி (எண்.31); தெலுங்கு: வாழ்க்கைக்கு இன்னும் மிக அதிகம் உண்டு!