அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ60-க்கு. ஆறு மாத சந்தாக்களும் மாதாந்தர பத்திரிகைகளுக்கு ஓர் ஆண்டு சந்தாக்களும் ரூ30. (மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது.) சந்தா பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளுடன் ஒரு புரோஷுரைச் சேர்த்து ரூ9-க்கு அளிக்கலாம். ஜூலை: ஆங்கிலத்தில் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? ரூ12-க்கு. (இந்திய மொழிகளில் அளிப்பு: 192 பக்க பழைய புத்தகங்களில் ஒன்று ரூ6.) ஆகஸ்ட்: பின்வரும் புரோஷுரை உபயோகியுங்கள்: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? இது கிடைக்கவில்லையென்றால் பின்வரும் 32-பக்க புரோஷுர்களில் ஏதாவதொன்றை உபயோகியுங்கள்: நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, என்றும் நிலைத்திருக்கும் அந்தத் தெய்வீக நாமம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன், மற்றும் பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், ஒவ்வொன்றும் ரூ3-க்கு. செப்டம்பர்: என்றும் வாழலாம் புத்தகம் ரூ40-க்கு. (சிறிய அளவு ரூ20) அக்டோபர்: ஆங்கிலத்தில் சிருஷ்டிப்பு புத்தகம் ரூ40-க்கு. (சிறிய அளவு ரூ20) இது கிடைக்கவில்லையென்றால் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகத்தை உபயோகிக்கவும்.
◼ 1993 நாட்காட்டிகள், வருடாந்தர புத்தகங்கள், வேதவாக்கியங்களை ஆராய்தல் ஆகியவற்றிற்கு ஜூலை 6-ம் தேதிக்குள் சபைகள் தங்கள் ஆர்டரை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதற்கான விசேஷ ஆர்டர் நமூனாக்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன.